உள்ளது. சாசனத்தின் வாயிலாக ஆராயும் பொழுது அவ்வூர்ப் பெயரின்
வரலாறு விளங்குகின்றது.
அங்குள்ள திருக் கோயிலில் அமர்ந்த ஈசன் ஒக்க
நின்றான் என்னும் திருநாமம் பெற்றுள்ளார்.
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்து நிற்கும் பரம்பொருளை ஒக்க நின்றான் என்ற சொல்
உணர்த்துவதாகும்.6 ஒக்க நின்றானையுடைய ஊர், ஒக்க நின்றான் புரம்
என்று பெயர் பெற்றது.
அதுவே ஒக்கணாபுரம் என் மருவிற்று.
தான்தோன்றீச்சுரம்
இராமநாதபுரம் என்னும் சேது நாட்டில் சிவபுரி என்ற ஊர் உள்ளது.
சுயம்பு வடிவத்தில் சிவன்
அங்கு
வெளிப்பட்டமையால் சிவபுரி என்னும்
பெயர்
அதற்கு அமைந்த தென்பர். அவ்வூரில் உள்ள
பழமையான
சிவாலயம் தான்தோன்றீச்சுரம் என்று சாசனங்களிற் குறிக்கப்படுகின்றது.7
பழைய கொங்கு நாட்டுப் பேரூர்களில் ஒன்று நம்பி பேரூர் ஆகும்.8
இப்போழுது அதன் பெயர்
நம்பியூர் என மருவியுள்ளது. அங்குள்ள
சிவாலயத்தின் பெயர் தான்தோன்றீச்சுரம்.9 எனவே,
அப் பதியிலும் ஈசன்
சுயம்பு வடிவத்தில் வெளிப்பட்டான் என்பது விளங்குகின்றது.
அடிக் குறிப்பு
1. M.E.R., 1930-31.
2. இது நாகபட்டின வட்டத்தில் உள்ளது.
3. திருக்கோயிலும் மண்ணுள் மூழ்கி மறைந்திருந்த தென்றும், சில
நூற்றாண்டுகளுக்கு முன்பு
ஒரு பெரியார் முயற்சியால் அது,
|