இறையவரும் உறைவிடமும்
இரு சுடர்
இந் நில வுலகிற்கு ஒளி தரும் சூரியனையும் சந்திரனையும் நெடுங்
காலமாகத் தமிழகம் போற்றி வருகின்றது.
சிலப்பதிகாரம் மங்கல
வாழ்த்துரைக்கு மிடத்து
ஞாயிறு, திங்கள் என்னும்
இரு சுடர்களையும்
போற்றுதல் இதற்கொரு
சான்றாகும்.1
பரிதி நியமம்
தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடல் பெற்றுள்ளது.
நியமம் என்பது
கோயில்.2 எனவே, பரிதி நியமம்
என்பது சூரியன் கோயில்3
ஆகும். பிற்காலத்தில்
பரிதியப்பர்
என்னும் பெயர் அக் கோயிற்
பெருமானுக்கு அமைந்தது. பரிதியப்பர் கோயில் பருத்தியப்பர்
கோயில் என
மருவி, இப்பொழுது பருத்திச் செடியோடு தொடர்பு கொண்டுள்ளது.
சூரியனார் கோயில்
இன்னும், திருவிடை மருதூருக்கு அருகே சூரியன் கோவில் ஒன்று
உள்ளது. அது முதற் குலோத்துங்க
சோழனாற்
கட்டப்பட்ட தென்று சாசனம்
கூறும். மூல
ஸ்தானத்தில் சூரியன் வடிவம் காணப்படுகின்றது.
மற்றைய
கிரகங்களும் தனித்தனி இடம் பெற்றுள்ளன. இக் கோயிலையுடைய
தலமும் சூரியனார்
கோயில் என வழங்கும்.4
திங்களூர்
சந்திரனைக் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல் திங்கள் என்பதாகும். சோழ
நாட்டில் திருவையாற்றுக் கருகே |