திங்களூர் என்ற ஊர் உண்டு. அவ்வூரில் அப்பூதியடிகள் என்ற
திருத்தொண்டர் அறம் வளர்த்த
வரலாறு பெரிய
புராணத்தில்
விளக்கப்படுகின்றது.5 கோவை
வட்டத்தில்மற்றொரு திங்களூர்
உள்ளது.
இவ்வூர்
இரண்டும் சந்திரனோடு தொடர்புடையன போலும்!
இரு சேய்கள்
பிள்ளையார்
ஈசனருளாலே தோன்றிய பிள்ளையாரும் முருகனும் தமிழ்நாடெங்கும்
வணங்கப் பெறுவர். ஒவ்வொரு
சிவாலயத்திலும் அவ் விருவருக்கும் தனித்
தனி இடமுண்டு. கோயில் இல்லாத சிற்றூர்களிலும்
பிள்ளையார் என்னும்
விநாயகர் ஆற்றங்கரை,
குளக்கரை, அரசமரம் முதலிய இடங்களில்
அமர்ந்திருப்பார்.
அப் பெருமானுக்குரிய பல பெயர்களுள் பிள்ளையார்,
கணபதி என்ற இரண்டும் ஊர்ப் பெயர்களில்
அமைந்திருக்கக் காணலாம்.6
பிள்ளையார்பட்டி
பாண்டி நாட்டில் குன்னக்குடிக்கு அருகேயுள்ளது பிள்ளையார்பட்டி
என்னும் ஊர்.7 முற்காலத்தில்
அது மருதங்குடி என்று வழங்கியதாகத்
தெரிகின்றது. அங்குப் பழமையான குகைக்கோயில் ஒன்றுண்டு.
அச்சிவாலயத்தின் ஒரு
சார் உள்ள பாறையில் பிள்ளையார் வடிவம்
அமைக்கப்பட்டது. நாளடைவில்
கற்பகப் பிள்ளையார் என்னும் பெயர்
வாய்ந்த அப் பெருமான் வரதமுடைய மூர்த்தியாக வணங்கப்பட்டார்;
அவர்
பெயரே ஊருக்கும் அமைவதாயிற்று.8 |