தமிழகமும் நிலமும்3

     சென்னைக்கு அருகேயுள்ள மலையொன்று பரங்கிமலை என்று பெயர்
பெற்றுள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே, பரங்கியர் என்னும்
போர்ச்சுகீசியர் அங்கே குடியிருப்புக் கொண்டமையால் அப்பெயர் அதற்கு
அமைந்ததென்பர்.8 திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் புதியதொரு நகரம்
இக் காலத்தில் எழுந்துள்ளது. அதற்குப் பொன்மலை என்பது பெயர்.

    தமிழகத்தில் முருகவேள், குறிஞ்சி நிலத் தெய்வமாக விளங்குகிறார்.
எந்த மலையும் அவர்தம் சொந்த மலையென்பது தமிழ் நாட்டார் கொள்கை.
ஆயினும், சில மலைகளில் முருகனருள் சிறந்து தோன்றுவதாகும்.9 பாண்டி
நாட்டுப் பழனி மலையும், சோழ நாட்டுச் சுவாமி மலையும், தொண்டை
நாட்டுத் தணிகை மலையும், இவை போன்ற பிற மலைகளும் தமிழ் நாட்டில்
முருகப் பதிகளாக விளங்குகின்றன.
 

கோடு

      மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம்
நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

      
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
        ஏரகமும் நீங்கா இறைவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம்
பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின்
சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்ற தென்பர்.

     தமிழ் இலக்கிய மரபில், மலை என்னும் சொல், ஓங்கி உயர்ந்த
பருவதத்தைக்குறிக்கும். மலையிற் குறைந்தது