30ஊரும் பேரும்

புதுக் கழனி முதலிய ஊர்களின் பெயரிலும் தஞ்சை நாட்டுக்காக் கழனியிலும்
காணப்படும்.

 வயல்; விளை

     வயல் என்னும் சொல் புதுவயல், நெடுவயல் முதலிய ஊர்ப்
பெயர்களில் வழங்கும். தென்னாட்டில் விளை புலங்களையுடைய ஊர்களை
விளையென்னும் பெயரால் குறிப்பதுண்டு. வாகை விளை, திசையன் விளை
முதலிய ஊர்கள் நெல்லை நாட்டில்
உள்ளன.
 

நில அளவு

    வேலியும் காணியும் நிலத்தின் அளவைக் குறிக்கும் சொற்களாகும்.
அவைகளும் ஊர்ப் பெயரிலே காணப்படும். தஞ்சை நாட்டு ஐவேலி, ஒன்பது
வேலி முதலிய ஊர்களும், மதுராந்தக வட்டத்திலுள்ள பெரு வேலியும்
நிலத்தின் அளவால் எழுந்த பெயர்கள் என்பது வெளிப்படை. அவ்வாறே

நெல்லை நாட்டில் உள்ள முக்காணி, சங்காணி முதலிய ஊர்ப் பெயர்களில்
காணி இடம் பெற்றுள்ளது. குறைந்த அளவினாகிய குறுணியும் நாழியும்,
சிறுபான்மையாகிய ஊர்ப் பெயர்களிற் காணப்படும். மதுரை நாட்டில்
சோழங்குறுணி என்றும் எட்டு நாழி என்றும் பெயருடைய ஊர்கள் உண்டு.

புன்செய்
 

    வளமிகுந்த நிலத்தை நன்செய்(நஞ்சை) என்றும், வளங்குறைந்த
நிலத்தை புன்செய்(புஞ்சை) என்றும் கூறுவர். தஞ்சை நாட்டில் பாடல் பெற்ற
நனி பள்ளி என்னும் தலம் இப்போது புஞ்சையென வழங்குகின்றது.93

தோட்டம்
 

  ஊற்று நீரை இறைத்துத் தோட்டப் பயிர் செய்யும் வழக்கமும்
தமிழ்நாட்டில் உண்டு. ஆதலால் தோட்டத்தைக்