300ஊரும் பேரும்

 
    
 “தூவாயா, தொண்டு செய்வார்படு துக்கங்கள்
      காவாயா” 2

என்று உருக்கமாகப் பாடியருளினார் சுந்தரர். அத்திருப்பாட்டின் அடியாகத்
தூவாய் நயினார் என்ற பெயர் அப் பெருமானுக்கு வழங்கலாயிற்று.
நாளடைவில் அப்பெயர் துலா நயினார் என மருவிற்று. எனவே, பழைய
மண்தளி இப்பொழுது துலா நயினார் கோயில் என வழங்குகின்றது.3

     சிதம்பரத்துக்கு அண்மையில் உள்ள புள்ளிருக்கு வேளூர் என்னும்
ஊர், பாடல் பெற்றதாகும். அங்கு அமர்ந்தருளும் பெருமானைச் சடாயு
என்ற புள்ளும், நால் வேதங்களுள் ஒன்றாகிய இருக்கு வேதமும்,
முருகவேளும் தொழுது அருள் பெற்றமையால், புள்ளிருக்கு வேளூர்
என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்று புராணம் கூறும். அப் பதியில்
கோயில் கொண்ட ஈசனை அருமருந்தாகக் கண்டு போற்றினர் திருஞான
சம்பந்தரும் திருநாவுக்கரசரும்.

        
“செடியாய உடல் தீர்ப்பான்
         தீவினைக்கோர் மருந்தாவன்”

என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. “மந்திரமும் தந்திரமும்
மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்” என்பது திருநாவுக்கரசர்
பாட்டு. இருவர் திருவாக்கின் பண்பும் பயனும் உணர்ந்த அடியார்கள்,
வினை தீர்த்தான் என்றும், வைத்தீஸ்வரன் என்றும் புள்ளிருக்கு வேளூர்ப்
பெருமானைப் போற்றுவா ராயினர்.4 இக் காலத்தில் வைத்தீஸ்வரன்
கோயில் என்பது திருக் கோயிலின்