தேவும் தலமும்301

பெயராகவும், அக்கோயிலை யுடைய ஊரின் பெயராகவும் வழங்குகின்றது.

     பாண்டி நாட்டுக் கானப்பேர் என்னும் ஊர் பாடல் பெற்ற பழம்
பதியாகும். அங்கே கோயிற் கொண்ட ஈசன் மீது ஆசையுற்றுப் பாடினார்
சுந்தரர். அவர் பாடிய பத்துப் பாட்டிலும் “கானப்பேர் உறை காளை” என்று
இறைவனைக் குறித்துப் போந்தார். அத்திரு வாக்கின் சீர்மையால் காளையார்
என்னும் பெயர் அவர்க்கு அமைந்தது காளையார் அமைந்தருளும் கோயில்
காளையார் கோயி லாயிற்று. கோயிற் பெயரே நாளடைவில்
ஊர்ப்பெயராகவும் கொள்ளப்பட்டது.

                    
அடிக் குறிப்பு

1. “அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேல் புத்தூரே”
-திருஞான சம்பந்தர் தேவாரம்.

2. தூவாயா - தூய வாயை யுடையோனே, ஈசனைத் “தூமறை பாடும்
வாயான்” என்று சேக்கிழாரும் குறித்தல் காண்க. தடுத்தாட்கொண்ட
புராணம்.

3. இக்கோவிலைத் துர்வாசர் கோயில் என்றும் கூறுவர். அதற்கேற்பக்
கோயிலுள் விநாயகர் பக்கத்தில் துர்வாசருடைய உருவம்
நிறுவப்பட்டிருக்கிறது.

4. வினை தீர்த்தான் கோயிலைக் குறித்த பாட்டொன்றுண்டு. “வாதக்காலாம்
தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம். போதப் பெருவயிறாம் புத்திரற்கு -
மாதரையில் வந்த வினை தீர்க்க வகையறியான் வேளூரான், எந்த வினை
தீர்த்தான் இவன்” என்று இகழ்வார் போல் புகழ்ந்தார் காளமேகம். இதனை
வீரமா முனிவர் பாட்டென்பாருமுளர்.


- Besse’s ‘Life of Beschi.’