தேவும் தலமும்303

நாளடைவில் அயிரைமலை யென்பது ஐவர் மலை யெனத் திரிந்தது.
ஐவராகிய பாண்டவர் அம் மலையில் தங்கியிருந் தனர் என்னும்
கதை எழுந்தது. அங்குக் கோயில் கொண்டி ருந்த கொற்றவை ‘ஐவர்க்குந்
தேவி அழியாத பத்தினி” என்று போற்றப்படும் பாஞ்சாலியாயினாள்.3

லாடபுரம்

    இன்றும், லாடபுரம் என்னும் ஊரைக் குறித்து ஒரு கதை வழங்குகின்றது.
அவ்வூரின் ஆதிப் பெயர் விராடபுரம் என்றும், பாண்டவர்கள் அஞ்ஞாத
வாசம் செய்தபோது அவரை ஆதரித்த விராட மன்னனுக்குரியது அவ்வூர்
என்றும் கருதப்படுகின்றன. அங்குள்ள இடிந்த கோட்டையை அவன்
அரண்மனையெனக் காட்டுகின்றார்கள். அப் பகுதியில் ஆடு மேய்க்கும்
இடையர்கள் இன்றும் அர்ச்சுனன் வில்லைச் சில வேளைகளில் காண்பதாகச்
சொல்வர்.

திருப்புல்லாணி

    இனி, இராம கதையோடு தொடர்புடைய ஊர்களில் சிலவற்றைப்
பார்ப்போம்; இராமன் இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் செல்லும்
பொழுது கோடிக்கரையை அடைந்தான் என்றும், அங்கு நின்ற
நெடுங்கடலைக் கடப்பதற்கு வழி தரும்படி வருண தேவனை வணங்கி
வரங்கிடந்தான் என்றும், அங்ஙனம் வேண்டுங்கால் திருப்புல்லைத்
தலையணையாக வைத்துப் பாடுகிடந்த இடம் திருப்புல்லணை என்று பெயர்
பெற்றதென்றும் கூறுவர். வடமொழியில் தர்ப்பசயனம் என்று அவ்விடம்
குறிக்கப்படுகின்றது. இவ்வாறு நெடும் பொழுது வேண்டி