திருவிடை மருதூருக்கு மத்தியார்ச்சுனம் என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
திருப்புல்லணை (திருப்புல்லாணி) என்னும் தென் சொல்லும், தர்ப்பசயனம்
என்னும் வடசொல்லும் ஒரு பதியையே குறிப்பனவாகும். இன்னும்,
வானமாமலை தோத்தாத்திரி எனவும், திருக்கழுக்குன்றம் வேதாசலம்
எனவும், திரு நீர்மலை தோயாசலம் எனவும் வழங்கக் காணலாம்.
இன்னோரன்ன தலப் பெயர்கள் பலவுள்ளன.
திரு
தமிழ் நாட்டில் தெய்வ நலம் பெற்ற ஊர்கள் பெரும்பாலும் திரு
என்னும் அடை பெற்று வழங்கும். ஆயினும், சில ஊர்ப் பெயர்களில் திரு.
இப்பொழுது உருக்குலைந்திருக்கின்றது. சோழ நாட்டுத்
திருவழுந்தூர்
தேரழுந்தூர் ஆயிற்று. தேவாரம் பெற்ற
திருத்தினை நகர், தீர்த்த நகரி
எனத் திரிந்தது.
திருநெய்த் தானம் என்னும் பழம் பதியின் பெயர் தில்லைத்
தானம் என
வழங்குகின்றது. இங்ஙனம் சிதைவுற்ற திருப்பெயர்கள்
பலவாகும்.
ஸ்ரீ
இன்னும், சில ஊர்ப்பெயர்கள் ஸ்ரீ என்ற வட சொல்லை அடை
மொழியாகக் கொண்டு வழங்குகின்றன. வைணவ உலகத்தில் தலை சிறந்து
விளங்கும் பதி ஸ்ரீரங்கம் ஆகும். ஆழ்வார்கள் பாடியருளிய
திருப்பாசுரங்களில் திருவரங்கம் என்று
அவ்வூர் போற்றப்படுகின்றது.
தென்னாட்டில் ஆழ்வார்
திருநகரிக்கு அருகேயுள்ள பழம்பதி ஸ்ரீ வைகுந்தம்
என்று பெயர்
பெற்றுள்ளது. பெரியாழ்வாரும் ஆண்டாளும் பிறந்தருளும்
பேறு பெற்ற
புத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூராக |