308ஊரும் பேரும்

விளங்குகின்றது. மெய்ஞானச் செல்வராகிய இராமானுஜர் பிறந்த ஊர்
ஸ்ரீபெரும்பூதூர் ஆகும்.

    தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் சீகாழி என்னும் ஊர் சாலச் சிறப்பு
வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய ஞான சம்பந்தர்
அவ்வூரிலே பிறந்து சிவஞான சம்பந்தர் ஆயினார். இத் தகைய செம்மை
வாய்ந்த ஊரின் பெயராக வழங்கும் சீகாழி என்ற சொல்லின் முதலெழுத்து
அடைமொழி என்பதில் ஐயமில்லை. ஸ்ரீ என்ற வட சொல்லே சீ
யாயிற்றென்பர் சிலர். சீர்காழி என்பதே சீகாழியென வழங்கலாயிற்றென்பர்
வேறு சிலர். தேவாரப் பாசுரத்தில் ‘சீர் திகழ்காழி’ என்று குறிக்கப்
பட்டிருத்தல் பின்னவர் கொள்கைக்கு ஆதாரமாகும்.6
 

சத்திமுற்றம்


    இங்ஙனம் சிதைவுற்ற சில ஊர்ப் பெயர்களின் அடியாகப் பிற் காலத்தில்

பல கதைகள் முளைத்து எழுந்தன. சோழ நாட்டில் கும்ப கோணத்துக்கு
அருகே சத்தி முற்றம் என்ற ஊர் உள்ளது. அங்கு அமர்ந்து அருள் புரியும்
இறைவனை, “திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே” என்று
போற்றியுள்ளார் திருநாவுக்கரசர். அவ்வூர்ப் பெயர் சத்திமுத்தம் என மருவி
வழங்கலாயிற்று. அதனடியாக ஒரு கதை எழுந்தது. பரா சத்தி யாகிய
பார்வதியம்மை பரமசிவனை முத்தமிடக் கண்ட பெருமை அவ்வூருக்கு
உரியதென்று புனைந்துரைத்தனர் புராண முடையார். அதற்கேற்ப, அங்குள்ள

திருக்கோயிலில் சத்தி,