மானாமதுரை;
வட மதுரை
பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையும் ஆன்ற பெருமை
வாய்ந்ததாகும். தமிழும் சைவமும் தழைத்தோங்கக்
கண்ட அந் நகரின்
பெயரை ஏற்றுத் திகழ்வது
மானா மதுரை. மான வீரன் மதுரை என்பது
மானாமதுரையாயிற்று என்பர்.8 சோழ நாட்டில் ஓர் ஊர் வடமதுரை என்று
பெயர்பெற்றுள்ளது.
திரு ஆலவாய் நல்லூர்
மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய் ஆகும்.
அத்திருக் கோயிலின் பெயரைக் கொண்ட திரு
ஆலவாய் நல்லூர் என்ற
ஊர் மதுரை நாட்டு நிலக்
கோட்டை வட்டத்தில் உள்ளது.
திரு இராமேச்சுரம்
பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுரம் பெரும் புகழ் வாய்ந்தது.
அங்குள்ள மூர்த்தி, தலம். தீர்த்தம் என்னும்
மூன்றையும் சைவ உலகம்
தலைக்கொண்டு போற்றும்.
அதன் பெருமையால் சோழ நாட்டிலும் ஓர்
இராமேச்சுரம் உண்டாயிற்று. நெடு மணல் என்று முன்னாளில் பெயர்
பெற்றிருந்த ஊரில் இராமேச்சுரம் என்ற கோயில் எழுந்ததென்பது
சாசனத்தால் விளங்கும்.9 இப்பொழுது கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.
குற்றாலம்
தென்பாண்டி நாட்டில் இயற்கை அழகும் இறைவன் அருளும் வாய்ந்த
சீரூர் திருக்குற்றாலம். அதன் பெருமையைக் கண்களிப்பக்கண்ட
திருஞானசம்பந்தர்,
“கொம்பர் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம்” |