தேவும் தலமும்311

என்று பாடி மகிழ்ந்தார். இத் தகைய குற்றாலத்தின் பெயரைச் சோழ
நாட்டிலுள்ள திருத் துருத்தி என்னும் பாடல் பெற்ற தலம் ஏற்றுக்கொண்டது.
காவிரித் துருத்தி என்று தேவாரத்திலும், வீங்குநீர்த் துருத்தி என்று
சாசனங்களிலும் வழங்கப் பெற்ற அவ்வூர் பிற்காலத்தில் குலோத்துங்க
சோழன் குற்றாலம் என்று பெயர் பெற்றது.10 இப்பொழுது குற்றாலம்
என்பதே அதன் பெயராகும்.11
 

திருப்பூவணம்

    பாண்டி நாட்டில் மூவர் தேவாரமும் பெற்ற பழம் பதிகளுள் ஒன்று
திருப் பூவணம் ஆகும். அப் பதி முடியுடைய தமிழ் வேந்தர் மூவராலும்
வணங்கப்பெற்ற தென்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

       
“ஆரா அன்பில் தென்னர் சேரர்
        சோழர்கள் போற்றிசைப்பத்
        தேரார் வீதி மாடம் நீடும்
        தென்திருப் பூவணமே”

என்பது அவர் தேவாரம். வைகை யாற்றின் மருங்கே வளமார்ந்த சோலை
சூழ்ந்த திருப்பூவணக் கோயிலில் எழுந்தருளிய ஈசனைப் “பொழில் திகமும்
பூவணத் தெம்புனிதன்” என்று திருநாவுக்கரசர் போற்றி யருளினார். அத்
திருக்கோயில் இப்போது புஷ்பவனேஸ்வரம் என்ற பெயரோடு
இராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவகங்கை வட்டத்தி லுள்ளது.

    தென்பாண்டி நாடெனப்படும் நெல்லை நாட்டில் மற்றொரு
திருப்பூவணம் உண்டாயிற்று. வடக்கே பாடல் பெற்ற திருப்பூவணம் ஒன்று
இருத்தலால், இதனைத் தென்