316ஊரும் பேரும்

திருப்பேரூர்
     
   
பழைய எயில் நாட்டில் ஒரு பேரூர் சிவஸ்தலமாகச் சிறந்திருந்தது.
அங்குள்ள சிவாலயம் சோழமன்னராலும், விஜய நகர மன்னராலும்
ஆதரிக்கப்பட்ட தென்பது கல்வெட்டுக்களால் விளங்கும்.1 இந் நாளில்
அவ்வூர்ப் பெயர் திருப்பத்தூர் எனத் திரிந்துவிட்டது. வடஆர்க்காட்டில்
திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அதுவே யாகும்.

பேராவூர்

     “பேரூர் பிரமபுரம் பேராவூர்” என்ற திருநாவுக்கரசர் பாசுரத்தால்
பேராவூர் ஒரு சிவஸ்தலம் என்பது விளங்கும். சோழ மண்டலத்தில்
பேராவூர் என்னும் ஊர் உள்ள தென்று சாசனம் கூறும்.2 பாடல் பெற்ற
சிறந்த தலமாகிய திருவாவடுதுறை பேராவூர் நாட்டைச் சேர்ந்ததாகும்.
இப்போது மாயவர வட்டத்திலுள்ள பேராவூரே அவ்வூர். அங்குள்ள
பழமையான திருக்கோயில் ஆதீச்சரம் என்னும் பெயருடைய தென்பது
சாசனத்தால் அறியப்படுகின்றது.3

இரும்புதல்

     இரும்புதல் என்பது ஒரு பழைய திருக் கோயிலின் பெயர்.
“இரும்புதலார் இரும்பூளையுள்ளார்” என்று பாடினார் திருநாவுக்கரசர். சோழ
நாட்டில் ஆவூர்க் கூற்றத்தில் அவ்வாலயம் அமைந்திருந்தது.
இரும்புதலுடைய  மகா தேவர்க்கு இராஜராஜன் முதலாய பெருமன்னர்
விட்ட நிவந்தங்கள் சாசனத்தில் காணப்படும்.4 அக் கோயில் மனுகுல
சூளாமணி சதுர் வேதிமங்கலம் என்ற ஊரில் இருந்ததாகக்