துடையூர் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வூர் பழமையான சிவஸ்தலம் என்பது
சாசனத்தாலும் அறியப்படும்.
திருச்சிராப்பள்ளியைச்
சேர்ந்த லால்குடி
வட்டத்திலுள்ள துறையூரே பழைய
துடையூராகும். இது
பாடல் பெற்ற
பாச்சில் (திருவாசி)
பதிக்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள
திருக்கோயில்
கடம்பந்துறை
என்று சாசனம் கூறுகின்றது.11
மூவலூர்
மூவலூர் என்னும் ஊரும் இறைவன் கோவில் கொண்ட இடங்களுள்
ஒன்றென்பது “மூவலூரும் முக்கண்ணன்
ஊர் காண்மினே” என்றும்
திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். இவ்வூர் மாயவரம் என்னும் மயிலாடு
துறைக்கருகே காவிரி யாற்றங்கரையில் உள்ளதென்று திருத்தொண்டர்
புராணம்
கூறும்.
இந் நாளில் குற்றாலம் என வழங்கும் திருத்துருத்தியில்
அமர்ந்த
பெருமானை வழிபட்டுப் பதிகம்
பாடிய திருஞான சம்பந்தர்,
“மூவலூர் உறை
முதல்வரைப் பரவி”12ப் பின்பு திருமயிலாடு துறையினில்
வந்தார் என்று
கூறுப்படுதலால் பாடல் பெற்ற துருத்திக்கும் மயிலாடு
துறைக்கும் இடையே
அமைந்தது
மூவலூர் என்பது இனிது விளங்குகின்றது.
புன்னாக வனம் என்று
புராணங்களிற் பேசப் படுகின்ற
மூவலூர்
மாயவரத்துக்கு அண்மையில்
உள்ளது.
முழையூர்
பழையாறையும் முழையூரும் பரமன் கோயில் கொண்டருளும் பதிகள்
என்பது, “முழையூர் பழையாறை |