சத்தி முற்றம்” என்னும் திருநாவுக்கரசர் வாக்கால்
தெரியலாகும். பாடல்
பெற்ற பழையாறை யும் வைப்புத்
தலமாகிய முழையூரும் ஒன்றை யொன்று
அடுத்துள்ள இடங்களாகும்.
சேலூர்
காவிரி நாட்டுத் தலங்களுள் ஒன்று திருச்சேலூர். திருத்தொண்டர்
புராணம் இத் தலத்தைக்
குறிக்கின்றது. திருப்புள்ள மங்கையில் ஈசனை
வழிபட்டுப் பாமாலை பாடிய திருஞான சம்பந்தர்
சேலூரைச் சேவித்துத்
திருப்பாலைத் துறை என்னும் பதியைச் சேர்ந்தார்
என்று சேக்கிழார்
கூறுகின்றார்.13 இவ்வூர் தஞ்சை
நாட்டுப் பாபநாச வட்டத்திலுள்ள
தேவராயன்
பேட்டையே என்பது
சாசனத்தால் தெளிவுறுகின்றது.14 இங்குள்ள
திருக்கோயிற் கல்வெட்டுக் களில் திருச்சேலூர்
மகாதேவர்க்குப்
பழங்காலத்தில் மன்னரும் பிறரும் விட்ட நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன.15
அக் காலத்தில் இஃது இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்த
தென்பதும்
விளங்குகின்றது. இன்று அக் கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன்
மச்சபுரீஸ்வரர் என வழங்கப்
பெறுகின்றார். சேல் என்பது ஒருவகை மீனின்
பெயராதலால் சேலூர் என்னும் ஊர் மச்சபுரி என
வட மொழியில் பெயர்
பெற்றது.16 எனவே, திருஞான சம்பந்தர் வழிபட்ட சேலூர்த் திருக்கோயில்
தேவராயன் பேட்டையிலுள்ள மச்சபுரி ஈஸ்வரர் கோயிலே என்பது
தெளிவாகும்.
ஊற்றத்தூர்
திருச்சி நாட்டைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் உள்ள
ஊற்றத்தூரும் ஒரு பழைய சிவஸ்தலம் ஆகும். “உறையூர் |