தேவும் தலமும்323

கடலொற்றியூர் ஊற்றத்தூர்” என்றெடுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.
அவ்வூரில் அமர்ந்த இறைவன் தொகுமாமணி நாயகர் என்று
கல்வெட்டுக்களிற் குறிக்கப் படுகிறார்.17 பிற்காலத்தில் குலோத்துங்க
சோழீச்சுரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. இரண்டாம்
இராஜராஜன் அச் சோழீச்சுர முடையார்க்கு உழுத்தம்பாடி யூரைத்
தேவதானமாக வழங்கிய செய்தியைக் கல்வெட்டிற் காணலாம்.18 ஊற்றத்தூர்
என்னும் பெயர் இக்காலத்தில் ஊட்டத்தூர் ஆயிற்று.19

காட்டூர்

     இன்னும், ஈசனார் கோயில் கொண்டருளும் ஊர்களுள் ஒன்று காட்டூர்
ஆகும். “காட்டூர்க் கடலே, கடம்பூர் மலையே கானப் பேரூராய்” என்று
சுந்தரர் காட்டூரிலே காட்சி தரும் பெருமானைப் பாடிப் பரவினார்.
செங்கற்பட்டு நாட்டைச் சேர்ந்த மதுராந்தக வட்டத்தில் காட்டூர் என்னும்
பழமையான பதி யொன்று காணப் படுகின்றது. அங்குள்ள ஈசன் கோவில்
திருவள்ளீச்சுரம். அவ்வாலயத்திற்கு இராஜராஜன் முதலாய சோழ மன்னர்
வழங்கிய நிவந்தங்களைச் சாசனங்களிற் காணலாம்.20 எனவே, சுந்தரர்
குறித்தருளிய காட்டூர் இப் பழம் பதியாயிருத்தல் கூடும் என்று
தோன்றுகின்றது.

 

குண்டையூர்

     இந் நாளில் திருக்குவளை என வழங்கும் கோளிலி என்னும் பழம் பதி
மூவராலும் பாடப் பெற்றதாகும். அவ்வூரின் அருகேயுள்ள குண்டையூர்
இனிய சோலை