332ஊரும் பேரும்

                    இறையும் அறமும்

சிவபாதக சேகர நல்லூரும் மங்கலமும

     சைவ சமயத்தைச் சார்ந்த பெரு மன்னர்கள் தமிழ் நாட்டில் அரசு
வீற்றிருந்தபோது சிவன் மணக்கும் சொற்களை ஊர்ப் பெயராக்கினார்கள்.
சிவபாத சேகரன் என்னும் சிறப்புப் பெயர் பூண்ட இராஜராஜன் உண்டாக்கிய
சிவபாத சேகர புரம் இப்பொழுது சிவாயம் என வழங்குதலை முன்னரே
கண்டோம். அம் மன்னன் பாண்டி நாட்டில் திருநெல்வேலிக்கு மேற்கேயுள்ள
கல்லூரில் சில நிலத்திற்குச் சிவபாத சேகர நல்லூர் என்று பெயரிட்டு,
அதனைச் சேரவன் மாதேவிக் கயிலாச நாதர் கோயிலுக்கு தேவதானமாக
விட்ட செய்தி சாசனத்தால் விளங்குகின்றது.1 இன்னும் சிவபாத சேகர
மங்கலம் என்ற ஊர் திருக்கடவூர்க் கோயிற் சாசனத்தில்
குறிக்கப்படுகின்றது.2 ஆகவே, சிவபாதசேகரன் பெயரால் அமைந்த புரமும்,
நல்லூரும், மங்கலமும் தமிழ் நாட்டில் சைவ சமயத்தின் பெருமையை
விளக்கி நின்றன.3

திருச்சிற்றம்பலம்

      திருச்சிற்றம்பலம் என்பது சைவ சமயத்தார் போற்றும் செம்மை சேர்
நாமம். தில்லை மன்றத்தின் பெயராகிய திருச்சிற்றம்பலத்தின் பெருமை
தமிழக முழுவதும் பரவி நின்றது. தேவாரப் பாமாலை பெற்ற
திருச்சிற்றேமம் என்னும் சிவாலயம் திருச்சிற்றம்பலம் என வழங்கலாயிற்று.4
குலோத்துங்க