சதுர்வேதி மங்கலம் என முற்காலத்தில் வழங்கிய பெயரே பிற்காலத்தில்
செந்தலை யெனச்
சிதைந்தது.19
வட ஆர்க்காட்டில் தீன சிந்தாமணியின் பெயர் கொண்ட சதுர்வேதி
மங்கலம் ஒன்றுண்டு.
தீன சிந்தாமணி என்பது முதற் குலோத்துங்கனுடைய
தேவியின் பெயராதலால், அவ்வூர் அவரால்
உண்டாக்கப்பட்டதென்று
கொள்ளலாகும்.20 கடைக்கோட்டுப் பிரம தேசம் என்பது அதன் மறு
பெயராகச்
சாசனத்தில் வழங்குகின்றது. இப்பொழுது பிரம தேசம் என்பது
அதன் பெயர்.21
பட்டவிருத்தி
கற்றுயர்ந்த பார்ப்பனர்க்கு இறையிலியாக அரசரால் விடப்படும் நிலம்
பட்டவிருத்தி யெனப்படும்.
பட்டவிருத்தி யெனப்படும்.
பட்டவிருத்தி யென்ற
ஊர் ஒன்று மாயவர வட்டத்தில்
உள்ளது.
பட்ட விருத்தி அய்யம்பாளையம்
என்ற ஊர் கோவை நாட்டுக் கோபி வட்டத்தில் உண்டு.
பட்ட மங்கலம்
இன்னும், பட்டமங்கலம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டிற்
பலவாகும். பாண்டி நாட்டுத்
திருப்பத்தூரில் ஒரு
பட்ட மங்கலம்;
சோழநாட்டு மாயவரத்தில் மற்றொரு
பட்ட மங்கலம்;
நாகப்பட்டினத்தில்
இன்னொரு பட்ட
மங்கலம்; இன்னோரன்ன மங்கலம் இன்னும் சிலவுண்டு.
அகரம்
அகரம் என்பது அக்கிரகாரத்தின் குறுக்கம் என்பர்.22 தமிழகத்தில்
அகரம் என்னும்
பெயருடைய ஊர்கள் |