தேவும் தலமும்339

                    தானமும் தருமமும்

          
“பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
          பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்”

 

தானம்

      தமிழ் நாட்டார் நன்கறிந்து போற்ற வேண்டும் என்று முறையிட்டார்
பாரதியார். அம் மன்னர் அளித்த தான தருமங்கள் சில ஊர்ப் பெயர்களால்
இன்றும் அறியக் கூடியன. தஞ்சை நாட்டில் உள்ள அன்னதானபுரம்,
தருமதானபுரம், மகாதானபுரம், உத்தமதானபுரம் முதலிய ஊர்கள்
முற்காலத்தில் அற நிலையங்களாக விளங்கின என்பதற்கு அவற்றின்
பெயர்களே சான்றாகும்.


தருமம்

      இன்னும், அறஞ் செய விரும்பிய அரசரும் செல்வரும்
பலவிடங்களில் சத்திரமும், சாவடியும், விடுதியும் அமைத்தார்கள். அவற்றின்
பெயர்கள் இப்பொழுது ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. நெல்லை
நாட்டிலுள்ள பாவூர்ச் சத்திரமும், திருச்சி நாட்டிலுள்ள செட்டி சத்திரமும்,
அம்மா சத்திரமும், தர்மசாலையால் பெயர் பெற்ற ஊர்கள் என்பது
வெளிப்படை. செட்டி சாவடி, குறும்பன் சாவடி, சத்திரச் சாவடி முதலிய
ஊர்ப் பெயர்கள் சாவடி யமைந்திருந்த இடங்களைக் காட்டுகின்றன. தஞ்சை
நாட்டிலுள்ள சென்னியவிடுதியும், திருச்சி நாட்டிலுள்ள பால விடுதியும்,
வழிப்போக்கர் தங்குமிடங்களை உடையனவாயிருந்தன, என்று கூறலாம்.
சத்திரம், விடுதி முதலிய அறநிலையங்களைப் பேணி வளர்ப்பதற்கு
விடப்பட்ட நிலம் சாலாபோகம் எனப்படும். தஞ்சை நாட்டில் சாலாபோகம்
என்பது ஓர் ஊரின் பெயர். இங்ஙனம் அற நிலையங்களை