நெய்தல் நிலம்
தமிழ் நாடு நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில் சோழ நாட்டுக்
கடற்கரை, சோழ மண்டலக்கரை
என வழங்கிற்று. அஃது ஐரோப்பியர்
நாவில் சிதைந்து கோர மண்டல் கரையாயிற்று. பாண்டி
நாட்டுக் கடலில்
நினைப்பிற் கெட்டாத நெடுங் காலமாக நல் முத்து விளைந்தமையால் அக்
கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால் குறிக்கப்பட்டது.100 சேர நாட்டுக்
கடற்கரை, மேல்
கரை என்று பெயர் பெற்றது.
கரை
கடற்கரையில் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின்
பெயர்களே காட்டும். பாண்டி நாட்டில்
கீழக் கரை என்பது ஓர் ஊரின்
பெயர். அககாலத்தில் முத்துச் சலாபம்
அங்குச் சிறப்பாக
அமைந்தது. பிற்
காலத்தில் மரக்கல வணிக மன்னராய்
விளங்கிய சீதக்காதி என்னும் மகமதிய
வள்ளல் அவ்வூரில் சிறந்து
வாழ்ந்தார். இன்னும் வைகை யாறு கடலோடு
கலக்கும் இடத்தில்
அமைந்த
ஊருக்கு ஆற்றங்கரை என்பது பெயர்.
முன்னாளில் சங்கு வாணிபம்
அவ்வூரில் நன்கு
நடைபெற்றது.
இராமேசுவரத்துக்கு அண்மையில் கோடிக்
கரை என்னும் ஊர் உண்டு. அது
தாலமி முதலிய
யவன ஆசிரியர்களாலும்
குறிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில்
தென்னிந்தியாவினின்று இலங்கை
நாட்டுக்குச் செல்வதற்குக் கோடிக் கரை
மார்க்கமே குறுக்கு வழியாக
இருந்தது.
துறை
கடல் வாணிபத்திற்குச் சாதனமாகிய இடம் துறை என்று பெயர்
பெறும். இக் காலத்தில்
அதனைத் துறைமுகம் |