348ஊரும் பேரும்

என்று நம்மாழ்வார் திருவிண்ணகரத்து அப்பனைப் பாடியருளினார். அவர்
திருவாக்கின் அடியாக ஒப்பிலியப்பன் என்னும் திருநாமம் அப்
பெருமாளுக்கு அமைந்தது. அது நாளடைவில் உப்பிலியப்பன் என
மருவிற்று. அப் பெயருக்கு ஏற்ப உப்பில்லாத நிவேதனம் அந்த
அப்பனுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

சீராம விண்ணகரம்

    சீகாழிப் பதியில் உள்ள சீராம விண்ணகரம் திருமங்கை யாழ்வாரால்
பாடப் பெற்ற பழம் பதியாகும். பதிகத்தின் முதற் பாசுரத்தில் ஈரடியால்
உலகளந்த திருமாலின் பெருமையைப் பாடினார் அவ்வாழ்வார்.

       
 “ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
         உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
         தருகஎனா மாவலியைச் சிறையில் வைத்த
         தாடாளன் தாளணைவீர்”


என்றெழுந்த திருவாக்கின் மகிமையால் ‘தாடாளன் கோயில்’ என்னும் பெயர்
அவ் விண்ணகர்க்கு இன்று வழங்கி வருகின்றது.
 

வைகுந்த விண்ணகரம்அரிமேய விண்ணகரம்

    தஞ்சை நாட்டுச் சீகாழி வட்டத்திலுள்ள பதினொரு திவ்ய தேசமும்
திருநாங்கூர்த் திருப்பதிகள் என்று வைணவ உலகத்தில் வழங்கப் பெறும்.
அவற்றுள் இரண்டு, விண்ணகரங்கள் ஆகும். வைகுந்த விண்ணகரம்
ஒன்று; அரிமேய விண்ணகரம் மற்றொன்று. “மாறாத பெருஞ் செல்வம்
வளரும் மணி நாங்கூர், வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே”
என்றும்,