350ஊரும் பேரும்

என்னும் இயற்பெயருடைய இரண்டாம் நந்திவர்மனால் அக்கோயில்
கட்டப்பட்டது என்பர்.9

நந்திபுர விண்ணகரம்
 

      திருமங்கையாழ்வார் பாடிய மற்றொரு விண்ணகரம்
 கும்பகோணத்திற்குத் தெற்கே நான்கு மைல் தூரத்திலுள்ள நந்திபுரம்
என்னும் பல்லவ நகரத்தில் அமைந்தது. “நந்தி பணி செய்த நகர் நந்திபுர
விண்ணகரம்” என்று அவர் பாடும் பான்மையால் நந்தி வர்மன்
அக்கோவிற்பணியில் ஈடுபட்டிருந்தான் என்பது இனிது விளங்கும்.
அவ்விண்ணகரப் பெருமாள் ஜெகநாதன் என்னும் திருநாமம் உடையார்.
நாளடைவில் ஜெகநாதன் கோயிலாகிய விண்ணகரம் நாதன் கோயில் என
வழங்கலாயிற்று. அதுவே பின்னர் ஊர்ப் பெயரும் ஆயிற்று.

வீரநாராயண விண்ணகரம்

     புதுவை நாட்டில் (புதுச்சேரி) உள்ள திரிபுவனி என்னும் திரிபுவன
மாதேவி சதுர்வேதி மங்கலத்தில் வீர நாராயண விண்ணகரம் விளங்கிற்
றென்று சாசனம் கூறுகின்றது.10 வீர நாராயணன் என்பது பராந்தக சோழனது
விருதுப் பெயர்களில் ஒன்று. முதற் குலோத்துங்க சோழன் காலத்தில்
திருநாராயண பட்டர் என்ற கவிஞர் குலோத்துங்க சோழன் சரிதை என்னும்
பெயரால் ஒரு காவியம் இயற்றினார் என்றும், அஃது அரசன் ஆணைப்படி
வீரநாராயண விண்ணகரத் திருமுற்றத்தில், ஊர்ச் சபையார் முன்னிலையில்
அரங்கேற்றப் பட்டதென்றும், காவியம் பாடிய புலவர்க்குச் சபையார்
சம்மானம் அளித்தனர் என்றும் தெரிகின்றன.11