சிங்கர்
குடி
புதுச்சேரிக்கு தென்மேற்கே ஆறு மைல் தூரத்தில் சிங்கர்குடி என்னும்
ஊர் உள்ளது. அங்குப் பழமையான பெருமாள்
கோவில் ஒன்று
காணப்படுகின்றது. நரசிங்கப்
பெருமாள் கோயில் என்பது அதன் பெயர்
நரசிங்க மூர்த்தியின் பெயரே ஊருக்கு அமைந்ததாகத் தோற்று கின்றது.
நரசிங்கர் குடி என்பது
சிங்கர்குடி என வழங்கலாயிற்று.
சம்பங்கி
நல்லூர்
வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஊர் ஒன்று சம்பங்கி
நல்லூர் என வழங்கப் படுகின்றது.
செண்பகப் பெருமாள் நல்லூர் என்னும்
பெயரேஇங்ஙனம் சிதைந்துள்ள தென்பது
கல்வெட்டுக்களால் விளங்கும்.23
சோழிங்கர்
வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்தில் சோழிங்கர் என்ற ஊர்.
உள்ளதுசோழ சிம்மபுரம் என்னும் பெயரே
அவ்வாறு மருவிற்றென்று குரு
பரம்பரை
கூறும்.24 அவ்வூரிலுள்ள கடிகாசலம் என்ற
குன்றின் மீது கோயில்
கொண்டுள்ள நரசிங்கப் பெருமாளை பேயாழ்வாரும்,
திருமங்கை யாழ்வாரும்
பாடியுள்ளார்கள். இந் நாளில் கடிகாசலப் பெருமாள்
கோவில்
சாலச்சிறப்புற்று விளங்குகின்றது.
திருநாராயணபுரம்
நாராயணன் என்னும் நாமம் பல ஊர்ப் பெயர்களில் விளங்குவதாகும்.
திருச்சி நாட்டிலுள்ள திரு நாராயணபுரம்,
அங்குக் கோயில் கொண்டருளும்
வேதநாராயணப் பெருமாள் பெயரால் நிலவுகின்றது.25 |