தேவும் தலமும்355

திருச்சானூர்


    கீழைத் திருப்பதிக்கு மூன்று மைல் தூரத்தில், சுவர்ணமுகி யென்னும்
பொன் முகலி யாற்றங் கரையில் உள்ளது திருச் சானூர். முன்னாளில்
இராசேந்திரசோழ மண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்தில் குடவூர்
நாட்டில் திருச்சானூர் என்னும் சுகனூர் இருந்ததென்று சாசனம் கூறும்.26
திருச்சுகனூரில் இப்பொழுது சிறந்து விளங்குவது அலர்மேல் மங்கையின்
கோயிலாகும். ஆயினும், பழங்காலத்தில் திப்பலா தீச்சுரம் என்னும்
சிவாலயமும் அங்குச் சிறந்திருந்ததாகத் தெரிகின்றது.27 திருப்பதி மலையில்
கோயில் கொண்டுள்ள வேங்கடாசலபதியின் தேவியாகிய அலர்மேல்
மங்கையின் திருக்கோயில் இக் காலத்தில் அங்கு சிறப்புற்று விளங்குதலால்
அலர்மேலு மங்கை புரம் என்னும் பெயரும் அதற்குண்டு.


                      
அடிக் குறிப்பு

1. புளிங்குடி, இப்பொழுது திருப்புளியங்குடி என வழங்கும். வைகுந்தம்
ஸ்ரீவைகுண்டம் எனப்படும்.

2. ஆராய்ச்சித் தொகுதி, 242.

3. திருமங்கை யாழ்வார் கடல்மல்லையைப்பற்றிப் பாடிய பதிகங்கள்
இரண்டனுள் முன் பதிகம், தல சயனத்தைப் பற்றிய தென்றும், கடற்கரைக்
கோயிலைப்பற்றிய பின்பதிகம் சலசயனத்தைப் பற்றிய தென்றும்
பிற்காலத்தில் இரண்டு பதிகங்களுமே தல சயனத் திருமாலைப்

ற்றியனவாகக் கருதப்பட்டுப் பாடமாறலாயின என்றும் ஊகிக்க இடம்
ஏற்படுகின்றது என்பர். (ஆழ்வார்கள் கால நிலை, ப. 144)

4. M.E.R., 1935-36.