364ஊரும் பேரும்

அருங்குளம்
 

      திருத்தணிகை மலைக்குக் கிழக்கே எட்டு மைல் தூரத்தில்
அருங்குளம்என்னும் சிற்றூர் ஒன்று உள்ளது. அவ்வூரில் சமண
சமயத்தார்க்குரிய கோயில் இன்றும் காணப்படுகின்றது. தர்மசாகரர் என்னும்
தீர்த்தங்கரர் அங்கு அமர்ந்துள்ளார். ஆதியில் அருகன் குளம் என்று
பெயர் பெற்ற ஊர் இப்போது அருங்குளம் என வழங்குகின்றது.17

அருங்குன்றம்
 

     திருத்தணிகை மலைக்கு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது
அருங்குன்றம். அங்குக் காணப்படுகின்ற அழகிய ஜினாலயம் கார் வெட்டு
நகரக் குறுநில மன்னரால் கட்டப்பட்ட தென்பர். தமிழ்ச் சிறு
காப்பியங்களுள் சிறந்ததாக  மதிக்கப்படும் சூளாமணியின் ஆசிரியராகிய
தோலா மொழித் தேவர் இவ்வாலயத்தில் அமைந்த தரும தீர்த்தங்கரரை
வழிபட்ட செய்தி அந்நூற் பாயிரத்தால் அறியப்படுகின்றது. எனவே, அருகன்
குன்றம் என்னும் பெயர் அருங்குன்ற மெனக் குறுகிற் றென்று கொள்ளுதல்
பொருந்தும்.

திருநறுங்கொண்டை

      நடு நாட்டிலுள்ள திருநறுங்கொண்டை என்ற ஊர் சமணர்கள் சிறந்து
வாழ்ந்த இடங்களுள் ஒன்றாகும். அங்குள்ள அப்பாண்ட நாதர் கோயிலிற்
பழைய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.18 அவற்றுள் ஒன்றில்
இராஜாதிராஜன் என்னும் சோழ மன்னன் மேலிற் பள்ளித் (மேலைக்கோயில்)
திரு விளக்குக்காக அளித்த நன்கொடை குறிக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க
சோழன் காலத்தில் வீர சேகர காடவராயன்