களர், அளம்
நெய்தல் நிலம் பெரும்பாலும் உப்பு தரையாகும். உப்பு நிலத்தைக்
களர் நிலம் என்றும்
கூறுவர்.108 களர் என்னும் சொல் ஒரு சில ஊர்ப்
பெயர்களிற் காணப்படுகின்றது. திருக்களர் என்பது தேவாரப்பாடல் பெற்ற
ஸ்தலம்.
உப்பு விளையும் இடம் அளம் எனப்படும்.
தஞ்சை நாட்டில்
நன்னிலத்துக்கு அண்மையில் பேரளம் என்னும் உப்பளம்
உண்டு. அப்
பெயரே அந் நிலத்தின்
தன்மையை உணர்த்துகின்றது.
குப்பம்
நெய்தல் நிலத்தில் வாழ்பவர் வலையர் என்றும், செம்படவர் என்றும்,
பரதவர் என்றும்
வழங்கப் பெறுவர்.
அன்னார் வசிக்கும் இடம் குப்பம்
என்னும் பெயரால் குறிக்கப்படும்.
சென்னையைச்
சேர்ந்த கடற்கரையில் பல
குப்பங்கள் உண்டு. காட்டுக்
குப்பம், கருங்குடிக் குப்பம், நொச்சிக்
குப்பம்,
சோலைக் குப்பம் முதலிய
குப்பங்கள் பரதவர் வாழும் இடங்களே யாகும்.
பாலை நிலம்
பழங் காலத்தில் பாலை ஒரு தனி நிலமாகக் கருதப்பட வில்லை. கடு
வேனிற காலத்தில் முல்லையும்
குறிஞ்சியும் வறண்டு கருகிப் பாலை என்னும்
படிவம் கொள்ளுமென்று சிலப்பதிகாரம் கூறுமாற்றால்
இவ்வுண்மை
விளங்கும்.109 ஆயினும், கால கதியில் பாலையும் ஒரு தனி நிலமாகக்
கொள்ளப்பட்டது.
நீரும் நிழலு மற்ற பாலை நிலத்தில் கொடுந் தொழில்
புரியும் கள்வர்கள்
குடியிருப்பார்கள் என்றும், அன்னார் வணங்கும் தெய்வம்
கொற்றவை என்றும் தமிழ் இலக்கியம்
கூறும். பாலை |