தமிழகமும் நிலமும்5

அறை 
 

      வைணவ உலகம் போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்று
திருவெள்ளறை என்பது. பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பாடிப்
போற்றிய அப் பழம்பதி ஒரு வெண்மையான பாறையின்மீது
அமர்ந்திருக்கின்றது. அது சுவேதகிரி என்று வடமொழியில் வழங்கும். 
எனவே, வெண்பாறையின் பெயரே அப்பதியின் பெயராயிற்று என்பது
தெளிவாகும்.14

கல


      இனி, கல் என்னும் சொல்லும் சில ஊர்ப்பெயர்களில் உண்டு. பாண்டி
நாட்டில் திண்டுக்கல் என்பது ஓர் ஊரின் பெயர். அவ்வூரின் மேல்
பக்கத்திலுள்ள பாறையின் பெயரே ஊருக்கு அமைந்ததாகத் தெரிகின்றது.15
அது முன்னாளில் சிறந்ததோர் அரணாக விளங்கிற்று. பாண்டி நாட்டுக்கும்,
கொங்கு நாட்டுக்கும் இடையேயுள்ள கணவாய்களைப் பாதுகாப்பதற்குத்
திண்டுக்கல் கோட்டை பெரிதும் பயன்பட்டதாகத் தெரிகின்றது. சேலம்
நாட்டில் நாமக்கல் என்ற ஊர் உள்ளது. ஆரைக்கல் என்பது அதன் பழம்
பெயராகும். ஆரை என்ற சொல் கோட்டையின் மதிலைக் குறிக்கும்.
ஆதலால், அவ்வூரிலுள்ள பாறையின் மீது முற்காலத்தில் ஒரு கோட்டை

இருந்தது எனக் கொள்ளலாம்.16

 

      மலையைக் குறிக்கும் வட சொற்களும் சிறு பான்மையாக

ஊர்ப்பெயர்களிலே காணப்படும். கிரி