இவ்வாறு மன்னரும் முனிவரும் போற்ற வீற்றிருந்த கண்ணகியின் கோயிலும்,
அக்கோயிலைத்
தன்னகத்தே கொண்டு விளங்கிய வஞ்சி மாநகரமும் இன்று
தேடித்திரிய வேண்டிய நிலையில் உள்ளன.
கொச்சி நாட்டிலுள்ள
திருவஞ்சைக்களமே வஞ்சி மாநகரம் என்பார் சிலர். திருச்சி நாட்டைச்
சேர்ந்த கருவூரே வஞ்சி என்பார் வேறு சிலர். இங்ஙனம் அலைகடலிற்
பட்ட துரும்புபோல்
ஆரய்ச்சி யுலகத்தில் அலமரும் நிலை இன்று வஞ்சி
மாநகரத்திற்கு வந்துவிட்டது.
சென்னை
இக் காலத்தில் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை
மாநகரம். முந்நூறு
ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக்
காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை;
கோட்டையும்
இல்லை. பெரும்பாலும் மேடு பள்ளமாகக்
கிடந்தது அவ் விடம். இன்று
சென்னையின்
அங்கங்களாக விளங்கும் மயிலாப்பூரும்,
திருவல்லிக்கேணியும் கடற்கரைச் சிற்றூர்களாக அந்
நாளில் காட்சி
யளித்தன. மயிலாப்பூரிலுள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப்
பழமை
வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப் பாடியுள்ளார்.7 திருமயிலைக்கு
அருகேயுள்ள திருவல்லிக்கேணி,
முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது.8
அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி
என்பது
அல்லிக்குளம். அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக் கவர்ந்த
கேணியின்
அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி என்று பெயர் பெற்றது.
அங்கே, பெருமாள், கோவில் கொண்டமையால்
திரு என்னும் அடைமொழி |