நாடும் நகரமும்57

சேர்ந்து திருவல்லிக்கேணியாயிற்று. திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும்
பள்ளமுமாகப் பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு. இன்று
மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அடியில் பெரும்பள்ளமாக
அந்நாளிலே காணப்பட்டது.

     ஆங்கிலக் கம்பெனியார், கோட்டை கட்டி வர்த்தகம் செய்யக்
கருதியபோது, ஒரு நாயக்கருக்கு உரியதாக இருந்த சில இடங்களை
அவரிடமிருந்து வாங்கினர்; அவர் தந்தையார் பெயரால் அதனைச்
சென்னப்பட்டினம் என்று வழங்கினர். அவ்வூரே இன்று சென்னப்
பட்டினமாய் விளங்குகின்றது. கம்பெனியார் கட்டிய கோட்டை
வளர்ந்தோங்கி விரிவுற்றது. மேடு பள்ளமெல்லாம் பரந்த வெளியாயின. நரி
மேடு இருந்த இடத்தில் இப்பொழுது பெரிய மருத்துவ சாலை இருக்கின்றது.9
மண்ணடியின் அருகே இருந்த பெருமேடு தணிந்து பெத்துநாய்க்கன்
பேட்டையாயிற்று. ஆங்கிலக் கம்பெனியார் ஆதரவில் பல பேட்டைகள்
எழுந்தன. அவற்றுள் சிந்தாதிரிப் பேட்டை, தண்டையார்ப்பேட்டை முதலிய
ஊர்கள் சிறந்தனவாகும்.

     இங்ஙனம் விரிவுற்ற நகரின் அருகே பல பாக்கங்கள் எழுந்தன. புதுப்
பாக்கம், சேப் பாக்கம், கீழ்ப் பாக்கம், நுங்கம் பாக்கம் முதலிய சிற்றூர்கள்
தோன்றி, நாளடைவில் நகரத்தோடு சேர்ந்தன. எனவே, சென்னையில்
ஆதியில் அமைந்தது கோவில்; அதன் பின்னே எழுந்தது கோட்டை;
அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின. அனைத்தும் ஒருங்கு
சேர்ந்து சென்னை மாநகரமாகச் சிறந்து விளங்குகின்றது.