முத்துப் பேட்டையென்று பெயர் பெற்றது. இப்பொழுது அங்குள்ள மகமதியர் சங்குச் சலாபத்தை
நடத்தி வருகின்றார்கள்.
வட ஆர்க்காட்டிலுள்ள வாலாஜா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும்.12
பதினெட்டு பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந்நகரம் பஞ்சு வியாபாரத்திலும்,
கூல வாணிகத்திலும் முன்னணியில் நின்றது. இக் காலத்தில் வாணிகம் குறைந்துவிட்டாலும், கைத்தொழில்
நடைபெற்று வருகின்றது.
சாலை
பாண்டி நாட்டில் கொற்கைத்துறை பழங்காலத்தில் சிறந்திருந்த
தன்மையை முன்னரே கண்டோம்.
வாணிபம் செழித்தோங்கி வளர்வதற்கு
நாணய வசதி வேண்டும். ஆதலால், கொற்கை மூதூரின்
அருகே அக்க
சாலை யொன்று அமைக்கப் பெற்றது. நாணயம் அடிக்கும் இடமாகிய அக்க
சாலையை
உடைய ஊரும் அக்க
சாலை என்று பெயர் பெற்றது. முதற்
குலோத்துங்க சோழன் சாசனத்தில் அக்க
சாலை ஈச்சுர முடையார் கோவில்
குறிக்கப்படுதலால், பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம்
வரை அவ்வூர்
அழிவுறாது இருந்தது என்பது விளங்கும். இச்சாசனம் அக்கசாலைப்
பிள்ளையார்
கோவிலிற் காணப்படுகின்றது.13
பழமையும் புதுமையும்
சில ஊர்களின் பழமையும் புதுமையும் அவற்றின் பெயர்களால்
அறியப்படும். நெல்லை நாட்டில்
பழவூர் |