என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரத்தில் பழையாறை என்னும் ஊர் பாடல்
பெற்றுள்ளது. இராமநாத
புரத்தில்
பழையகோட்டை என்னும் ஊர் உண்டு.
புதிதாகத் தோன்றும் ஊர்கள், புது
என்னும்
அடை மொழியைப்
பெரும்பாலும் பெற்று வழங்கும்.
புதுக்கோட்டை, புதுச்சேரி, புதுக்குடி,
புதுக்குளம், புதுப்பேட்டை, புதுவயல்
முதலிய ஊர்ப் பெயர்களால்
அவ்வூர்கள் புதிதாக வந்தவை
என்பது
போதரும்.
கிழக்கும் மேற்கும்
சில ஊர்களின் திசையை அவற்றின் பெயரால் நன்கறிதல் கூடும்.
இலக்கியத் தமிழில் குணக்கு
என்பது கிழக்கு; குடக்கு என்பது மேற்கு. இவ்
விரு சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படும்.
ஒரு காலத்தில்
சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய ஜெயங்கொண்ட சோழபுரத்துக்குப்
பத்து மைல் தூரத்தில் உள்ள ஊர் குணவாசல்
என்று பெயர் பெற்றுள்ளது.
தஞ்சை நாட்டில் குடவாசல்
என்பது ஓர் ஊரின் பெயர். முன்னாளில் சிறந்து
விளங்கிய ஒரு நகரத்தின் மேற்குத் திசையில்
அவ்வூர் அமைந்தது போலும்!
இன்னும், குடகு என்னும் நாடு தமிழ் நாட்டில்
மேற்கு எல்லையாக
விளங்கிற்றென்று இடைக் காலத் தமிழ் இலக்கணம்
கூறுகின்றது.14
தமிழகத்தின் மேற்றிசையில்
அமைந்த காரணத்தால் தமிழ்
நாட்டார்
அதனைக் குடகு என்று அழைத்தார்கள். கிழக்கு, மேற்கு
என்னும்
சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன. நாகப்பட்டினத்துக்கு
அருகேயுள்ள |