வேளூர், கீழ் வேளூர் என்று அழைக்கப்படுகின்றது. அவ்வூரின் பெயர்
இப்பொழுது கீவளுர் என்று
சிதைந்துள்ளது.
மலாடு என்னும் பழைய நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் கீழுர்
ஆகும். பாண்டி நாட்டுக்
கரையில் உள்ள கீழக்கரை என்னும் துறையும்,
மதுரையிலுள்ள கீழக்குடி என்னும் ஊரும் திசைப்
பெயர்களைத் தாங்கி
நிற்கின்றன. மதுரையி லுள்ள மேலூரும், வட ஆர்க்காட்டிலுள்ள
மேல்பாடியும்
இன்னோரன்ன பிறவும் மேற்குத் திசையைக் குறிப்பன வாகும்.
வடக்கும் தெற்கும்
இங்ஙனமே வடக்கும் தெற்கும் சில பெயர்களில் அமைந்துள்ளன.
தமிழ் நாட்டுக்கு வடக்கே
யுள்ள நாட்டை வடுகு என்றழைத்தனர் பண்டைத்
தமிழர். “வடதிசை மருகின் வடுகு
வரம்பாக” என்று
பாடினார் ஒரு பழம்
புலவர்.15 வடபாதி மங்கலம் முதலிய
ஊர்களிலும் வடக்கைக் காணலாம்.
தமிழகத்தின் தென்பால் அமைந்த
பாண்டிநாடு, தென்னாடு என்று பெயர்
பெற்றது. அந்நாட்டிலுள்ள
தென்காசி,
தென்திருப்பேரை முதலிய ஊர்கள்
தெற்கே எழுந்தவை என்பது
வெளிப்படை.
தலை, இடை, கடை
இன்னும் ஊர்களின் அமைப்பைக் கருதி, தலை, இடை, கடை என்னும்
அடைமொழிகள் அவற்றின் பெயரோடு
இணைக்கப்படுவ துண்டு.
தலையாலங்கானம், தலைச் செங்காடு
என்னும் பாடல் பெற்ற ஊர்களின்
பெயரில் தலையென்னும் அடைமொழி அமைந்துள்ளது. சேலம் நாட்டில்
தலைவாசல் என்பது ஓர் ஊர். தஞ்சையில் |