80ஊரும் பேரும்

என்னும் இரண்டு ஊர்கள் உண்டு. அவை பழங் கோட்டைகளாகக்
கருதப்படுகின்றன. இக் காலத்தில் பெரும் பழஞ்சிக்கு வழங்கும் தளபதி
சமுத்திரம் என்னும் பெயரும் அவ்வூரின் வீரத் தன்மையை விளக்குகின்றது.
 

ஆரை

     ஆரை என்னும் சொல்லும் கோட்டையின் மதிலைக் குறிப்பதாகும்.
சேலம் நாட்டில் ஆரைக்கல் என்னும் கோட்டை உண்டு. அங்குள்ள
பாறையின் மீது பெருமாள் கோவில் எழுந்து சிறந்தது. பெருமாளுடைய
திருநாமம் ஆரைக்கற் பாறையில் போடப்பட்டது. அக் காரணத்தால்
ஆரைக்கல் என்னும் பழம் பெயர் மாறி நாமக்கல் என்னும் பெயர்
அவ்வூருக்கு அமைவதாயிற்று.27 அஃது இரு பகுதிகளையுடையதாய்
விளங்குகின்றது. ஒன்று கோட்டை; மற்றொன்று பேட்டை. கோட்டை இரு
நூறடி உயரமுள்ள பாறையின் உச்சியில் உள்ளது. அரைமைல் சுற்றளவுடைய
கோட்டையின் மதில்கள் இன்றும் காணப்படுகின்றன. பேட்டையே ஊராக
விளங்குகின்றது.
 

கிடங்கில்

     அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு.
முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும்,
கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன்  என்ற சிற்றரசனது
பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர்,
கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண்
செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும்