குடியும் படையும் 81

சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை
அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு
அண்மையில் திண்டிவனம் இப்போது சிறந்து திகழ்கின்றது.
 

படைவீடு

    அரசனுக்குரிய படைகள் அமைந்த இடம் படைவீடு எனப்படும். தமிழ்
நாட்டார் வீரத்தெய்வமாக வழிபடும் முருகன் ஆறு சிறந்த படை வீடுகளில்
அமர்ந்து அருள் புரிகின்றான் என்பர்.28 நெல்லை நாட்டில்
பாண்டியனுக்குரிய படை வீடு ஒன்று பொருநையாற்றின் கரையில் இருந்தது.
மணப்படை வீடு என்பது அதன் பெயர். இப்பொழுது மணப்படை என்று
வழங்கும் அவ்வூரின் அருகேயுள்ள கொட்டாரம், செப்பறை என்னும்
சிற்றூர்கள் அதன் பழம் பெருமைக்குச் சான்று பகர்கின்றன.29 பாண்டி
நாட்டின் பண்டைத் துறைமுக நகரமாகிய கொற்கைக்கு மணப்படை வீடு ஒரு
சிறந்த பாதுகாப்பாக அமைந்திருந்ததென்று கருதலாகும்.

     வட ஆர்க்காட்டில் ஆரணி என்னும் ஊருக்கு மேற்கே ஆறு மைல்
தூரத்தில் படைவீடு என்ற பெயருடைய சிறந்த நகரம் ஒன்று இருந்தது.
குறும்பர் குலத்தைச் சேர்ந்த அரசர்கள் அதனைத் தலைநகராகக் கொண்டு
நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர்; அந்நாளில் அப் படைவீடு பதினாறு மைல்
சுற்றளவுடையதாய், கோட்டை கொத்தளங்களோடு விளங்கிற்று.30 சோழ
மன்னர் குறும்பரை வென்று அவர் படைவீட்டை அழித்தனர் என்று
சரித்திரம் கூறும். இன்று அந் நகரின் பண்டைப் பெருமையொன்றும்
காணப்பட