வில்லை. இடிந்து விழுந்த மதில்களும், எருக்கும் குருக்கும் அடர்ந்த
காடுகளும் பழைய படைவீட்டின்
எல்லை காட்டி நிற்கின்றன. மண் மாரியால்
அவ்வூர் அழிந்து விட்டதென்று அங்குள்ளார்
கூறுவர்.31
பாளையம்
படைவீரருக்குரிய ஊர் பாளையம் எனப்படும். தமிழகம் முழுமையும்
பல பாளையங்கள் காணப்படினும்
சிறப்பாகக் கொங்கு நாடே
பாளையத்திற்குப் பேர் பெற்ற நாடாகும்.
பாளையத்தின் தலைவன்
பாளையக்காரன்
என்று அழைக்கப்படுவான். மேட்டுப்பாளையம்,
கோபிச்செட்டி பாளையம், உத்தமபாளையம்,
உடையார் பாளையம், இராஜ
பாளையம் முதலிய பாளையங்கள் தமிழ் நாட்டில் உண்டு. திருநெல்வேலிக்
கருகே பாளையங் கோட்டை என்னும் ஊர் உள்ளது. அதற்கு மேற்கே
யுள்ள பாளையம் மேலப் பாளையம்
என்று பெயர் பெற்றது.
வல்லம்
வல்லம் என்ற சொல்லும் அரணுடைய ஊரைக் குறிப்பதாகத்
தெரிகின்றது. வட ஆர்க்காட்டிலுள்ள
திருவல்லம் என்னும் ஊர் பாண
மன்னர்களுக்குரிய கோட்டைகளில் ஒன்றாக
விளங்கிற்று. அஃது
ஒரு சிறந்த
படை
வீடாகப் பத்தாம் நூற்றாண்டில் விளங்கிய
பான்மை சாசனங்களால்
அறியப்படும்.32
தஞ்சாவூருக்குத் தென் மேற்கே ஏழு மைல் தூரத்தில் மற்றொரு
வல்லம் உண்டு. இக் காலத்தில்
அழிந்த அகழிகளே யன்றி, அதன் பழம்
பெருமையை அறிதற்குரிய |