88ஊரும் பேரும்

வெற்றியைப் பாட்டில் அமைத்தனர் தமிழ்ப் பாவலர்.33
 

தலையாலங்கானம்


     தலையாலங்கானமும் பண்டை நாளில் ஒரு பெரும் போரைக் கண்டது.
பாண்டியன் நெடுஞ்செழியன் பகையரசரை வென்று அழியாப் புகழ் பெற்ற
களம் தலையாலங்கானம். ‘இளையன் என்றும், சிறியன் என்றும் என்னை
இகழ்ந்துரைத்த சேர சோழ மன்னரைத் தாக்கித் தகர்த்துச் சிறை பிடித்து
மீள்வேன்’ என்று செழியன் கூறிய வஞ்சினப் பாட்டு புறநானூற்றிலே
காணப்படுகின்றது.34 சேர சோழ மன்னர்க்குக் குறுநில மன்னர் ஐவர்
துணைபுரிந்தனர். இரு திறத்தார்க்கும் தலையாலங்கானத்தில் நிகழ்ந்த கடும்
போரில் செழியன் வென்றான். எழுவரும் தோற்றனர். புவிச் செல்வமும்,
புலமைச் செல்வமும் வாய்ந்த நெடுஞ் செழியனைப் புலவர்கள் பாமாலை
சூட்டிப் புகழ்ந்தனர். செழியனது ஆன்ற மதிப்பிற்குரியராயிருந்த
மாங்குடி மருதனார் அம்மன்னைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து
மதுரைக் காஞ்சி பாடினார். நற்றமிழ் வல்ல நக்கீரர் அவன்மீது
நெடுநல்வாடை பாடினார். இங்ஙனம் தலையாலங்கானத்துச் செரு வென்ற
நெடுஞ்செழியன் தமிழ் இலக்கிய உலகத்தில் அழியாப் புகழ் பெற்றான்.

     இமய மலையில் புலிக்கொடி யேற்றிய கரிகாலன் வழிவந்த சோழர்கள்
பல்லவ மன்னர்க்கு ஆறு நூற்றாண்டுகளாக அடங்கி யிருந்தார்கள். அந்த
நிலையில் பல்லவ மன்னன் அபராசிதன் என்பவன் கங்கவாணனைத்
துணைக் கொண்டு பாண்டி நாட்டின்மீது படையெடுத்தான்.
கும்பகோணத்திற்கு வட மேற்கே ஐந்து மைல் தூரத்தில்