அதியர்
தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.12
அன்னார் தலைவன்
அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர்
கோமான் என்றும் வழங்கப்பெற்றான். ஒரு
காலத்தில் அதியமான் ஆட்சி
தமிழ் நாட்டில் பெரும் பகுதியில்
நிலவியிருந்ததாகத் தெரிகின்றது.
அக்
குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன்
அதியமான் நெடுமான்
அஞ்சியாவான்.13 அவனது
நாட்டின் தலைநகர் தகடூர்
என்று தமிழ்
இலக்கியம் கூறும். அவ்வூருக்கு ஐந்து மைல் தூரத்தில்
அதமன் கோட்டை
என்னும் பெருடைய ஊர் அமைந்திருக்கின்றது.
முன்னாளில் அங்கிருந்த
கோட்டையின்
அடையாளங்கள் இன்றும்
காணப்படும்.14 அக் கோட்டை
அதியமானால் கட்டப்பட்டது போலும்!
அதியமான் கோட்டை என்பது
அதமன் கோட்டையென மருவியிருத்தல்
கூடும். இன்னும், சேலம்
நாட்டிலுள்ள
அதிகப்பாடியும், செங்கற்பட்டிலுள்ள
அதிகமான் நல்லூரும்
அவ்வரசனோடு தொடர்புடையனவாகத்
தோன்றுகின்றன.
ஆவியர்
ஆவியர் குலம் மற்றொரு தமிழ்க் குலம். அக் குலத்தார் பழனி மலைப்
பகுதிகளில் வாழ்ந்து
வந்தார்கள். அவர் தலைவன் ஆவியர் கோமான்
என்று பெயர் பெற்றான். கடையெழு
வள்ளல்களில் ஒருவனாகிய பேகன்
என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன்.
வையாவிக்
கோப்பெரும் பேகன்
என்று சங்க இலக்கியம் அவனை
குறிக்கின்றது.15 அம் மன்னன் அரசாண்ட
ஊர்
வைகாவூர் என்றும்,
வையாபுரி என்றும் வழங்கிற்று. |