98ஊரும் பேரும்

முருகனுக்குரிய படைவீடுகளுள் ஒன்றாகிய ஆவிநன்குடி என்னும் பதி
ஆவியர் குடியிருப்பேயாகும். திரு ஆவிநன் குடி என்பது பழனியின் பெயர்.
 

ஓவியர்


     ஆவியரைப் போலவே ஓவியர் என்னும் வகுப்பாரும் இந்நாட்டில்
இருந்தனர். சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக்
கோடன் என்னும் சிற்றரசன் அவ்வகுப்பைச் சேர்ந்தவன், அவன் ஆட்சி
புரிந்த நாடு ஓய்மா நாடு என்று சாசனங்களில் குறிக்கப்படுகின்றது. ஓவியர்
பெருமானாகிய குறுநில மன்னனால் நெடுங்காலம் ஆளப்பட்ட நாடு ஓவிய
வர்மான் நாடு என்று பெயர் பெற்றுப் பின்னர் ஓய்மான் நாடென்று
சிதைந்திருத்தல் கூடும். திண்டிவனம், கிடங்கில், வயிரபுரம் முதலிய ஊர்கள்
அந் நாட்டைச் சேர்ந்தனவாகும்.16
 

வேளிர்

     இன்னும், வேளிர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பார் முன்னாளில்
சிறந்து விளங்கினர். அக்குலத் தலைவர்கள் சோழகுல மன்னரோடு உறவு
கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தாரில் ஒரு வகையார்
இருக்குவேளிர் எனப் பெயர் பெற்று, புதுக்கோட்டை நாட்டிலுள்ள
கொடும்பாளூர் முதலிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். அறுபத்து மூன்று
சிவனடியார்களில் ஒருவராகிய கணம்புல்லர் என்பவர் இருக்கு வேளூரிற்
பிறந்தவர் என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது. இன்னும் சோழ
நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதியொன்று புள்ளிருக்கு வேளூர் என்று பெயர்
பெற்றிருக்கிறது.17 இவ்வூர்ப்