நண்பன் இதனைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டனன்; ‘நமது முயற்சி வென்ற’ தென்றே துள்ளிக் குதித்தனன். கண்ணை மூடி காந்தி இரவில் தூங்கும் வேளையில், கனவு கண்டு மிகவும் நெஞ்சு கலங்க லாயினர். வயிற்றுக் குள்ளே ஆடு வந்து நிற்க லானது; வாயை விட்டு ‘மேமே’ என்று கதற லானது. உயிரைக் கொன்றே ஊனைத் தின்னல் தப்புத் தப்பென உணர்ந்தார்; அதனை எண்ணி எண்ணி உருக லாயினர். |  | | |
|
|