பக்கம் எண் :

14

பெரியோர் வாழ்விலே


என்று மிகவும் வியப்படைந்தார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? பரிசு முத்துசாமிக்கே
கிடைத்தது.

     பரிசாகக் கிடைத்த ஐந்நூறு ரூபாயையும் முத்துசாமி பத்திரமாக வைத்திருந்தார்.
கடைசி காலம் வரை ஒரு தம்படிகூட அதிலிருந்து எடுத்துச் செலவு செய்யவில்லை.

* * *

     சென்னை உயர்நீதி மன்றத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் நீதிபதியாயிருந்தார். ஒரு
நாள் அவர் வீட்டுத் தோட்டத்திற்குள் ஓர் இந்தியர் நுழைந்து விட்டார். அதனால், அந்த
வெள்ளைக்கார நீதிபதிக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது. கோபத்தில் அந்த
இந்தியரை அவர் நன்றாக அடித்துவிட்டார்.

     அடிபட்ட இந்தியர், வெள்ளைக்கார நீதிபதி மீது வழக்குத் தொடுத்தார். அந்த
வழக்கு அப்போது மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த முத்துசாமி அய்யரிடம் விசாரணைக்கு
வந்தது. அந்த வெள்ளைக்கார நீதிபதியை நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்று
அடிபட்டவர் வேண்டிக் கொண்டார். அதன்படி முத்துசாமி அய்யர், அந்த நீதிபதியை
நேரில் வருமாறு உத்தரவிட்டார்.

     இதைக் கேட்டுப் பலர் திடுக்கிட்டனர். உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவரை
- அதிலும் ஒரு வெள்ளைக்காரரை நேரில் வரவேண்டுமென்று ஒரு மாஜிஸ்ட்ரேட் உத்தரவு
போடுவது என்றால்