(இவ்வாறு, இயற்கைப் பொருள்கள் பற்றியும், சிந்தையும் மொழியும் செல்லா நிலையுடையன பற்றியும் கற்பனைக் கட்டுரை கள் எழுதலாம்.) 16. நிறைவேறிய தீர்மானகங்களை உரிய இடங்களுக்கு அனுப்பிவைத்தல். சென்ற வகுப்பில் தீர்மானங்களை எவ்வாறு எழுதுவது என்று கற்றுக் கொண்டீர்கள். எழுதக் கற்றுக் கொள்வதோட மையாது, அத் தீர்மானங்களை நிறைவேற்றித் தலைவர், செயலர் கையொப்ப மிட்டு, உரிய அலுவலகங்களுக்கு அனுப்பப் பழகிக் கொள்ள வேண்டுமட. அத்தீர்மானங்களைச் செயற்படுத்த அவற்றுடன் வேண்டுகோட் கடிதமொன்று வைக்கப்பெறல் வேண்டும். தீர்மானங் களைப் பல படிகள் எடுத்து அனுப்புதல் வேண்டும். தீர்மானம் பொதுவிடம் அல்லது மன்றம் பற்றியதாக யிருக்குமானால், அதனை நாளிதழ்களுக்கு அனுப்பி வெளியிடச் செய்தல் வேண்டும். தீர்மானங் களைப் படி எடுத்து அனுப்பு கின்றபொழுது, தூய்மையாகத் தெளிவாகத் தட்டெழுத்துப் பொறியின் மூலம் படிஎடுத்தோ, அல்லது நல்ல முறையில் எழுதியோ அனுப்புதல் வேண்டும். தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மட்டும் பயனில்லை. உரிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம்தான் அவை பயனளிக்கும். 17. ஒருபொருள் அல்லது சூழ்நிலை பற்றி ஒட்டியும் வெட்டியும் உரையாடல் அமைத்தல். உரையாடற் கலை, வளர்க்கப் பெற வேண்டிய கலையாகும். மாணவர்கள் இருபாலும் எண்ணத்தக்க பொருள் குறித்துச் சொற் போர் நிகழ்த்தப் பழகியிருப்பார்கள். காட்டாக: ‘சிறந்த வாழ்க்கை அமைவது சிற்றூரிலா? நகரத்திலா?’ என்ற பொருள் குறித்து ஒட்டியும் வெட்டியும் உரை நிகழ்த்துகின்றபொழுது, மாணவர்கள் தாங்கள் சேர்ந்த கட்சிக்கு வெற்றி வேண்டிப் பல ஆதாரங்களையும், கருத்துக் களையும் சேர்க்க முற்படுவர். அப்பொழுது அவர்கள் ஒன்றின் நன்மையையும், தீமையையும் நன்கு உணர்வர். அவர்கள் சிந்தனையைக் கிளறி விடுவதற்கு இவ்வுரையாடல் பெருந்துணை புரியும். |