எழுதிப் பாரதியாரிடம் தந்தார்; உறவினர் வீட்டிலேயே தங்குமாறு சொல்லி விடுத்தார். ஆங்கில அரசின் ஆணை எந்நேரத்தில் பாரதியார் மீது பாயுமோ என்ற நிலையில் தக்க ஏற்பாட்டுடன் குவளைக் கண்ணனும் நண்பர் சிலரும் பாரதியாரைப் புதுவைக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுருக் கொண்ட பாரதியார் மறுநாள் காலையில் புதுவையை அடைந்தார்; குப்புசாமி ஐயங்காரின் வீட்டைக் கண்டுபிடித்துக் குவளைக் கண்ணன் கொடுத்த கடதத்தை அவரிடம் கொடுத்தார். குப்புசாமி ஐயங்காரும் உடன்பட்டுப் பாரதியாரைத் தம் வீட்டில் தங்கவைத்துக் கொண்டார். புதுவையில் ‘இந்தியா’ ‘இந்தியா’ இதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் சென்னையில் சிறைசெய்யப்பட்டார் அன்றோ? எத்தகைய குற்றமும் அவர் செய்யவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. விடுதலை பெற்ற திருமலாச்சாரியார் சென்னையில் தங்க விருப்பமின்றிப் புதுவைக்கே வந்து சேர்ந்தார்; பாரதியாரைப் பார்த்தார். ‘இந்தியா’ இதழை மீண்டும் தொடங்கு வதென இருவரும் முடிவு செய்தனர். சென்னையில் இருந்த அச்சுப் பொறிகள் புதுவை வந்து சேர்ந்தன. கி.பி. 1909இல் மீண்டும் ‘இந்தியா’ வெளிவரலாயிற்று. புதுவையிலிருந்தே தமிழகம் முழுவதற்கும் அவ்விதழ் அனுப்பப் பெற்றது. தடைவிதிக்கப் பெற்ற ‘இந்தியா’ தமிழ் மக்களின் கைகளிலே மீண்டும் தவழ்ந்தது; வாடிய பயிர்க்கு வான் மழை போலத் தளர்வுற்ற தமிழர்க்குப் புத்துயிர் கொடுத்தது. இருவர் தொடர்பு செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரையும், தமிழ்மொழிக் காவலராம் நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரையும், பாட்டுக்கொரு புலவன் திருநெல்வேலி மாவட்டம் வ.வெ.சுப்பிரமணிய ஐயர் எனும் வீரப் பெருமகனாராலும் சிறப்புப் பெற்றது. தாய் நாட்டன்பில் தலைசிறந்த அவரை அரசியலுலகம் வ.வெ.சு. ஐயர் என்றே அழைத்தது. ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற அவர் இலண்டனில் படித்துக் கொண்டிருந்தார்; அங்கிருந்தபடியே இந்தியாவில் ஆங்கில அரசு நடத்தும் அடக்குமுறைகளைக் கூர்ந்து கவனித்து வந்தார்; இந்தியத் தாய் நாட்டில் மக்கள் படும் இன்னல்களை எண்ணிப் பார்த்தார், நெஞ்சம் பொறுக்கவில்லை. அவர் இங்கிலாந்தில் இருந்துகொண்டே அந் நாட்டுக்கு எதிராகத் தம் எதிர்ப்புக் கருத்து களை எடுத்து முழக்கினார். ஆங்கில அரசு இவற்றை யெல்லாம் |