பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

4. புணர்ச்சி

1.பல, சில, பூ, தெங்கு, மரம், தேன்

இவற்றின் புணர்ச்சி

1.பல, சில என்னும் சொற்களின் புணர்ச்சி

1. பல+பல=பலபல1. சில+சில = சிலசில

2. பல+பல=பலப்பல2. சில+சில=சிலச்சில

3. பல+பல=பற்பல3. சில+சில=சிற்சில

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களை நோக்குங்கள்.

1. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, அவை பலபல, சிலசில என இயல்பாகவும் புணரும்.

2. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்கு முன் சில என்ற சொல்லும் வந்து புணரும் பொழுது, அவை பலப்பல சிலச்சில என வல்லெழுத்து மிக்கும் புணரும்.

3. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, நிலை