பக்கம் எண் :

எக்கோவின் காதல்201

இப்படி ஏதேதோ பட்டங்கள் வழங்கின. 'வாழ்வுக்கு வழி' 'மங்கையர் மாண்பு' 'விடுதலை வேண்டுமா?' என்ற தலைப்புகளிலே புலவர் பெருமக்களால் மேடைகளிலே பேசப்பட்டன அவன் கவிதைகள்.

இதைக் கண்ட எனக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம், மக்களின் நிலைமை கண்டு வருத்தம் ஒரு பக்கம், என்ன உலகம் இது! அவன் உயிரோடு இருக்கும்பொழுது உணவின்றிக் கழித்த நாள்கள் எத்தனை! அன்று ஆதரவு தருவாரில்லை. இன்று! ... பேசுவது - எழுதுவது - பாடுவது எல்லாம் அவனைப் பற்றி. சீர்திருத்த வாதியை உயிரோடு வாட்டுவது - இறந்தபின் உருவச்சிலை நாட்டுவது - அவனைப் பலபடப் போற்றுவது! இது மக்களியல்பாகிவிட்டது.

லகப் பெரும்போர் முடிந்தது. சிங்கப்பூரிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கப்பல் புறப்பட்டு விட்டது. அதிலே தமிழ்நாட்டு மக்கள் தம் தாயகத்திற்குத் திரும்பினர். அதே கப்பலில் என் நண்பன் கண்ணனும் வந்து சேர்ந்தான்.

"மறைந்த கவிஞர் மாளவில்லை. இழந்த மாணிக்கத்தைப் பெற்றுவிட்டோம். அவருக்குச் சென்னையிலே வரவேற்பும் பாராட்டும் நடைபெறும். கவிஞர் கண்ணன் வாழ்க".

- 'வானவில்'

இதைக் கண்ட என் நண்பனுக்கு மண்ணில் இருக்கிறோமா - விண்ணில் பறக்கிறோமா? என்ற ஐயம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் சமாளித்துக் கொண்டு "நண்பா! இது என்ன வேடிக்கை!" என்றான்.

"கண்ணா! உன்னைச் சிங்கப்பூரிலுள்ள என் நண்பன் கோ பாலனிடம் அனுப்பினேன் அல்லவா. நீ அங்கு போய்ச் சேர்ந்தா யோ இல்லையோ போர்மூண்டு விட்டது; நின்ற பாடில்லை. இதுதான் சமயம் என்று எண்ணி நீ கடலில் மறைந்தாய் என்று விளம்பரம் செய்தேன். அதன் பின்புதான் உன் பாடல்களுக்கு மதிப்புக் கிடைத்தது மக்களிடமிருந்து. என்கனவு நனவாயிற்று. பாராட்டுக் கூட்டத்திலே நான் சொல்கிறபடியே பேசிவிடு. அதுதான் நீ எனக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு".

கடல்போன்ற கூட்டம். பெருத்த கைத்தட்டலுக்கிடையே எழுந்து நின்றான் கண்ணன் சிங்க ஏறுபோல.

"தோழர்களே! அறிஞர்களே!"