பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்49

உணர்வு காரண மாகப் பசும்பூட் பாண்டியனின் படைத் தலைவனாய் விளங்கிய நெடுமிடல், எவ்விக்குப் பல இடையூறுகள் செய்துவந்தான். இதனால் எவ்வி, சேரலின் உதவியை நாடினான். சேரல் படை எவ்விக்கு உதவியது. போரில் நெடுமிடல் கொல்லப்பட்டான்.

நெடுமிடலைக் கொன்ற நார்முடிச் சேரலின் படையும் எவ்வி யின் படையும் அரிமணவாயில் (அரிமழம்), உறத்தூர் (உரத்தநாடு) ஆகிய இடங்களில் கள்ளும், பெருஞ்சோறும் உண்டு மகிழ்ந்தன.

கொடுமிடல் 3மாய்தல்

கொடுமிடல்3 என்பவன் பாண்டியனின் மற்றொரு படைத் தலைவன். நெடுமிடல் போரில் சாயவே இவன் பாண்டியர் படைக்குத் தலைமை தாங்கிப் போரை நடத்தினான். இவனும் நெடுமிடலைப் போலவே கொல்லப்பட்டான்.

இந்தப் போர் வெற்றியினால் நார்முடிச் சேரலுக்குக் கிடைத்த நாடு, நெல்லும் கரும்பும் விளையும் நாடாகும்.4

போரில் இவன் பெருமலை (பழனிமலை) யானைகளைப் பயன்படுத்தி பெற்றிபெற்றான்.

பெரும்படை

இவனது படை வரம்பில்லாத வெள்ளம்போல் வருவது;5 நால் வகைப் படைகளையும் கொண்டது;6 பகைவர்களுக்குப் பேய் போன்ற நடுக்கத்தைத் தருவது; ஆயினும், நகைவர்க்கு (மகிழ்ச்சி செய்பவர் களுக்கு) அரண்போல் விளங்கியது.7 போர் நிழலில் வாழ்வதையே அப் படை மிகவும் விரும்பியது.8

போராற்றல்

பகைவரது காவல் மரங்களில் இவன் தனது யானைகளைப் பிணிப்பான்; அந்த யானைகளைப் பகைவர் நாட்டிலுள்ள நன்னீர்த் துறைகளில் குளிக்கச் செய்து கலக்குவான். வானை மதிலாகவும்,


3. பதிற். 32 : 10

4. புறம். 24 : 1 - 13

5. பதிற். 33 : 6

6. ௸ 34 : 4 - 12

7. ௸ 31 : 34

8. ௸ 40 : 1