| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 51 |
பட்ட இந்தக் கோவை, களாப்பழமும் களங்காயும் கோத்துக்கட்டிய கண்ணி போல் காட்சியளித்தது. இந்தக் கோவையால் அழகுபடுத்தப் பட்டிருந்த பட்டுத் துணியால் ஆன முடியை இவன்அணிந்திருந்ததால் இவன் ‘களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான்.18 இந்தப் பெயர் பாடலின் உள்ளேயே பாடிய புலவரால் குறிப்பிடப்பட்டுள்ளமை வலிமை மிக்க சான்றாகத் திகழ்கிறது. கொடைத்தன்மை இனிய பொருள் எதனைப் பெற்றாலும் இவன் அதனைப் பகுத்துண்ணும் பண்பினன் ஆவான்;19 பாணர்க்கும்,20 விறலியர்க்கும்,21 பரிசிலர்க்கும்22 இவன் பரிசில் வழங்கினான். போர்த் தொழிலில் வல்ல யானைகளை இவன் பரிசிலாக வழங்கியதும் உண்டு.23 தனக்கு மகிழ்ச்சியூட்டியவர்களுக்கு இவன் நல்ல கலன்களை வழங்கினான்.24 பண்பு நலம் போரில் வெற்றி பெற்றாலும் சினம் தணியாத அரசர்கள்தாம் சங்ககாலத்தில் மிகுதி. இவனோ சினங்கொள்ளாமலேயே நெடுமிடல், கொடுமிடல் ஆகியவர்களோடு போரிட்டு வென்றனன்;25 போர்க் கைதிகளை நன்முறையில் நடத்தினான். இவன் தனது கொள்கையில் சிறிதும் வளைந்து கொடுக்க மாட்டான். இவன் ஆன்று அவிந்து அடங்கிய செம்மலாக விளங்கினான்.26 சிறப்புப் பெயர் இவனை வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயராலும் அழைத்து வந்தனர். இவனது ஆட்சியின்கீழ் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்பதை இதனால் உணரலாம்.
18. ௸ 38 : 4 23. ௸ 40 : 31 19. ௸ 38 : 15 - 16 24. ௸ 37 : 4 20. ௸ 38 : 9, 40 : 24 25. பதிற். 32 : 10 21. ௸ 40 : 21 26. ௸ 37 : 10 - 14 22. ௸ 38 : 9 |