பக்கம் எண் :

238மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

தீமுகங்களாய் இறைத்தன
     புனலையும் சிதறி.”

“சண்டமாருதஞ் சுழன்றுறை
     யூரெலாஞ் சலியா
வெண்டிசாமுகந் திரிந்திட
     ஒன்றிலொன் றெடுத்துக்
கொண்டுகீழ்விழ வெறிந்தன
     பலபல குவையாய்
மண்டிரண்டன மலைபெருங்
     குழவிகண் மான.”

“மாடமாளிகை மறைந்தன
     மறைந்தன மணித்தேர்
ஆடரங்கெலாம் புதைந்தன
     புதைந்தன அகங்கள்
கூடகோபுரம் கரந்தன
     கரந்தன குளங்கள்
மேடுபட்டன காவுடன்
     ஆவண வீதி.”

இவ்வாறு உறையூர் மண்மூடி மறைந்துவிட்டது. அது மறைவ தற்குக் காரணம் சமணரா, சிவபெருமானா என்னும் ஆராய்ச்சி வேண்டுவதில்லை. பழைய உறையூர் மண்ணுக்குள் மறைந்து கிடக்கிறது என்பதை இலக்கியச் சான்று கொண்டு அறிகிறோம்.

இந்த ஊரை அகழ்ந்து பார்த்தால், அங்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தமிழர் நாகரிகம், பண்டைய சரித்திரம், சமயம் முதலிய பல செய்திகளை அறியலாம். பழைய கட்டடங்களைப் பாதுகாப்பதற்கும், மறைந்துபோன இடங்களை அகழ்ந்து எடுப்பதற்கும் என்றே இந்திய அரசாங்கத்தார் ஆர்க்கியாலஜி இலாகா1 என்னும் ஓர் இலாகாவை அமைத்திருக்கிறார்கள். இதன் கிளை இலாகா சென்னை மாகாணத்திலும் இருக்கிறது. இந்த இலாகா உறையூர் போன்ற மறைந்த இடங்களைத் தோண்டிப் பார்க்க முயற்சி செய்யவில்லை. வடநாடுகளில் வேலை செய்வதைவிட மிகக் குறைந்த அளவில்தான் இந்த இலாகா தென்னிந்தியாவில் வேலை செய்கிறது. அதிலும் தமிழ்


1. Archaeological Dept.