பக்கம் எண் :

262மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில், ஏறக்குறைய முன்னூறு ஆண்டு களாக யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினாலே, யவன (கிரேக்க) மொழிச் சொற்கள் சில தமிழில் கலந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு நாட்டார் மற்ற நாட்டாருடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் மொழிச் சொற்கள் மற்ற மொழியுடன் மற்ற மொழியுடன் கலப்பது இயற்கை. இந்த இயற்கை, இறந்துபோய் வழக்கிலில்லாத மொழியைவிட, பேச்சு வழக்கில் உள்ள மொழிகளுக்கு மிகவும் பொருத்தமாகும். தமிழ் மொழியில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொற்கள் எவை என்று இன்னும் நன்கு **** பேச்சு வழக்கில் கலந்த கிரேக்க மொழிச் சொற்கள் பல இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொகள் முழுவதும் ஆராயப்படவில்லை. இப்போது தெரிந்தவரையில், தமிழில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொற்கள் இரண்டே. அவை மத்திகை, சுருங்கை என்பன. மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி (சவுக்கு) என்னும் பொருள் உள்ள யவன மொழிச் சொல். சுருங்கை என்பது நகரத்துக் கழிவுநீர் (சாக்கடை நீர்) போவதற்காகப் பூமியில் அமைக்கப் படுகிற கால்வாய் என்னும் பொருள் உள்ள யவன மொழிச் சொல். இவ் விரண்டு சொற்களும் சங்க காலத்துத் தமிழ் நூல்களிலும் பிற்காலத்துத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

ஓரை என்னும் சொல்லும் ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லி லிருந்து தமிழ் மொழியில் புகுந்தது என்று சிலர் கருதுகிறார்கள். இது பற்றிக் கருத்து வேற்றுமை உண்டு. ஓரை என்னும் சொல், வட மொழியில் உள்ள யவனிகா என்னும் சொல்லைப் போல ஓசையினால் கிரேக்க மொழி போல மயங்கச் செய்கிற ஒரு சொல்லாகும். நாடக மேடைகளில் கட்டப்படுகிற திரைச்சீலைக்கு வடமொழியில் யவனிகா என்றுபெயர். யவன நாட்டிலிருந்து வந்த திரைச் சீலை யாகையால், இதற்கு யவனிகா என்று பெயர் வந்தது. பண்டைக் காலத்தில் யவனர்கள் (கிரேக்கர்கள்) தமது நாடக மேடைகளில் திரைச்சீலை உபயோகப் படுத்தவில்லை. திரைச்சீரை உபயோகப்படுத்தப்படாத நாட்டிலிருந்து திரைச்சீலை வட மொழியாளருக்கு வந்தது என்றால் அதை எப்படி நம்புவது? தமிழர் நாடக மேடைகளில் உபயோகித்து வந்த திரைச் சீலைக்கு எழினி என்பது பெயர். எழினி என்னும் சொல்லை வடமொழி யாளர் உச்சரிக்க முடியாமல் அதை யவனிகா என்று உச்சரித்தனர் என்று தோன்றுகிறது. யவனர் என்னும் சொல்லும் யவனிகா என்னும்