பக்கம் எண் :

210மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 10

மாற்ற முயற்சி செய்தாள். கணிகையர் குலப்பெண்கள் காசிலேயே கருத்தாயிருக்க வேண்டும்; ஒரு செல்வன் போனால் இன்னொரு செல்வனைப் பிடிக்கவேண்டும்; குல மகளைப்போலப் பத்தினிப் பெண்ணாக இருப்பது கணிகையருக்குப் பொருந்தாது; பொருள் ஈட்டுவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருக்கவேண்டும் என்று அவள் தன்னுடைய மகளுக்குக் கணிகையர் குலத்துக்கு உரிய கொள்கையை உபதேசஞ் செய்தாள்.

பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தங்
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினம் போலும்இயல்பினம். அன்றியும்
நறுந்தாது உண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்.
வினையொழி காலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்

என்று தன் குலத்தொழிலை விளக்கிக் கூறினாள். மேலும் இதையே வற்புறுத்திச் சொன்னாள்.

கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னூறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிதர்தங்குடியில் பிறந்தாய் அல்லை
ஆடவர் காண நல்லரங் சேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
கருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்தேர் மொழியில் பயன்பல வாங்கி
வண்டில் துறக்கும் கொண்டி மகளிரேம்.

இவ்வாறெல்லாம் சித்திராபதி கணிகையர் வாழ்க்கையின் இயல்பை மாதவிக்கு எடுத்துரைத்தாள். ஆனால் மாதவியோ கணிகை வாழ்க்கையை விரும்பவில்லை. அவள் கணிகைத் தொழிலை