| 75 | மலைத்தளம் பறித்தம் மன்னவர் சுமந்தச் சிலைத்தளங் கொண்டு செய்தசிலைத் தளமு மெல்லையி லுகந்தொறுஞ் செல்வந் தொலையாது வரும்படி வகுத்த நிச்சங்க மல்லன் பெரும்பண் டாரமும் பிறைமுடிப் பெருமா |
| 80 | ளின்னாள் வந்திருந் தமைதோன் றவு முன்னா ளமைந்த முறைமை காணவும் வாட்டடங் கண்ணியர் மனைத்தொறும் பலிகொளக் காட்டிய வடிவிற் கங்காள வேடமும் வான்முகத் தமரர் வணங்கச் செய்த |
| 85 | நான்முகத் தெரு நாயகி தனக்கு மப்படி வகுத்த வணிநெடுந் தெருவுஞ் செப்பிய கதிரவர் திசைவலம் போதும் சோதி நன்மணி வீதிகள் இலங்கக் கலைபயில் தவத்தோர் நிலைபெற விருக்க |
| 90 | மலைவகுத் தனைய காங்கயன் மடமுங் கானிற் பயிலுங் கடவுளர் தமக்கு வேனிற் றென்றல் வியன்பெருங் கவரி யிருமருங் கிரட்டவு மிமையவர் துதிக்கவு மருமணம் பெருகிய வாள்வல பெருமாள் |
| 95 | திருநெடுந் தோப்புந் தீத்த மாகிய வமுத நன்னதி யனைத்திலுங் தூய தமி ணாடு காத்த பெருமாள் தடாகமும் வண்டிசை பாடல் மதுமலர் வாசங் கொண்ட காடவ குமாரன் தோப்புங் |
| 100 | கவின் வெம்பரிக் கதிர்வழி தடுத்த வவனி யாளப் பிறந்தான் தோப்பும் தலநிகழ் சேனைத் தலைவன் தோப்பும் வெம்மை நாளில் வெஞ்சுர னடைந்தவர் தம்மனங் குளிரத் தண்டலை நிழற்செயு |
| 105 | மம்மை மடமு மைய்ய னேரியும் வெற்பகந் துளைத்தெனக் கற்புடை யராகி யடனெடும் பிலத்தி லமுதுவந் தெழுந்த வடிவாள் வல்ல பெருமாள் கிணறு மளிமுரல் கமலமு மாம்பலு மலர்ந்து |